More
Categories: Cinema News latest news

விஜய் படத்தில் ரஜினியா? என்னங்க சண்டை செய்ற நேரத்துல இப்படி ஒரு ஷாக்கை கொடுக்குறீங்க?

Rajinikanth: விஜய் படத்தில் ரஜினி நடிக்க இருக்காரா? இப்போ பரவிக்கொண்டு இருக்கும் இந்த ஆச்சரியமான தகவல்கள் தான் இணையத்தில் ஹாட் டாக்காகி இருக்கிறது. அது என்னனு விசாரிச்சா தலைவர் அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ இந்த வேலையையும் ஆரம்பித்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

வேட்டையன் படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் இருக்கிறது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 படத்தில் நடிக்க இருக்கிறார். இது லோகேஷின் ஸ்டைல் இல்லாமல் புதிய பரிணாமத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

Advertising
Advertising

இதையும் படிங்க: சிவாஜி அப்பவே பதில் சொல்லிட்டார்!.. கலைஞர் 100 விழாவில் ஏழரையை இழுத்து வசமாக சிக்கிய ரஜினி..

ஜெயிலர் படத்தின் வெற்றியால் ரஜினிகாந்த் சுறுசுறுப்பாக இயங்கும் போதே முடிந்த அளவுக்கு நடித்து விடலாம் என்ற ஐடியாவில் இருக்கிறாராம். இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய அடுத்தடுத்த இயக்குனர்களையு ஓகே செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது தலைவரின் 172வது படத்தினை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். படத்தினை செவன் ஸ்கிரீன் சார்பில் லலித் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தினை அடுத்து தலைவர்173 படத்தினை மீண்டும் நெல்சனே இயக்க இருக்கிறார். இது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கடுத்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என்றும் தகவல்கள் கிசுகிசுக்கிறது.

அது சரி இதுல எங்க விஜய் வராருனு நினைக்கிறீங்களா? தலைவர்172 படத்தினை தயாரிக்கும் லலித், விஜயின் நெருங்கிய உறவினர் என்பது அனைவரும் தெரிந்த சேதி தான். அவரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸில் விஜயும் முதலீடு செய்து இருக்காராம். அதனை வைத்து பார்த்தால் விஜய் தயாரிப்பில் தான் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: டி.எம்.எஸ் தான் பாடிய பாடலை மீண்டும் கேட்டதே இல்லையாம்!.. ஒற்றை பாடலால் அவர் வாழ்க்கையில் அடித்த பூகம்பம்!..

Published by
Akhilan

Recent Posts