சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள்!. ரசிகர்களுக்கு ரஜினி கொடுக்கப்போகும் டபுள் ட்ரீட்!..

by சிவா |   ( Updated:2024-09-13 04:17:24  )
rajini 1
X

rajini 1

தமிழ் சினிமாவில் இப்போது ஹீரோவாக நடித்து வருபவர்களில் சீனியர் நடிகராக இருப்பவர்கள் ரஜினி - கமல் இருவர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் குணச்சித்திர நடிகர்களாக மாறிவிட்டார்கள். ரஜினி நடிக்க வந்தபோது சினிமாவில் ஹீரோவாக இருந்த பலர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

ரஜினிக்கே 72 வயது ஆகிறது. ஆனாலும், இன்னும் துள்ளலுடன் சினிமாவில் நடித்து வருகிறார். இப்போதும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திவிட்டு மீண்டும் சுறுசுறுப்புடன் வேட்டையன் படத்தில் நடித்துவிட்டு, இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

coolie

#image_title

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருந்தவர் மற்றும் இருப்பவர் ரஜினி மட்டுமே. சினிமாவில் வெற்றி பெறுவது கடினம் எனில் அதை பல வருடங்கள் தக்க வைப்பது மிகவும் கடினம். ஆனால், இப்போது வரை ரஜினி அதை செய்து காட்டி வருகிறார். அதற்கு அசாத்தியமான உழைப்பும், நம்பிக்கையும், திறமையும் வேண்டும்.

அது இன்னமும் ரஜினியிடம் இருப்பதால்தான் இப்போதும் அவர் சூப்பர்ஸ்டாராக இருக்கிறது. ஜெயிலர் பட ஆடியோ விழாவில் சொன்னது போல எப்போதும் கழுகாகவே வானத்தில் உயர பறந்து வருகிறார். அவரின் இடத்தை இப்போது வரை யாராலும் பிடிக்கமுடியவில்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் கூலி படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருபக்கம், ரஜினி சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. 2025 ஆகஸ்டு மாதம் அவர் 50 வருடத்தை பூர்த்தி செய்யவிருக்கிறார். ஏனெனில், அவர் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் 1975ம் வருடம் ஆகஸ்டு மாதம் வெளியானது.

சினிமா உலகம் ரஜினிக்கு என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை. நியாயமாக பார்த்தால் அவருக்கு திரையுலகம் பாராட்டு விழாவை நடத்த வேண்டும். அது நடக்கிறதோ இல்லையோ, 50வது வருடத்தை கொண்டாடும் வகையில் ரஜினி தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

கூலி படம் இறுதிக்கட்டத்தை எட்டும் போதே ஜெயிலர் 2 படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. படத்துக்கான கதையை நெல்சன் ஏற்கனவே உருவாக்கிவிட்டார் என சொல்லப்படுகிறது. எனவே, 2025ம் வருடம் ரஜினியின் கூலி மற்றும் ஜெயிலர் 2 என இரண்டு படங்கள் வெளியாகப்போகிறது.

ரஜினி ரசிகர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்!...

இதையும் படிங்க: லோகேஷுக்கு வந்த அதே பிரச்சனைதான் வெங்கட் பிரபுவுக்கும்!.. பாவம் திட்டு வாங்குறாரு!..

Next Story