அப்படியே தாத்தா ரஜினி ஸ்டைல்!.. அடுத்த ஹீரோ ரெடி!.. வைரலாகும் லால்சலாம் ஆடியோ விழா வீடியோ...

by சிவா |   ( Updated:2024-01-26 14:12:27  )
laal salaam
X

Lal salaam: ரஜினிக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா. இளையவர் சௌந்தர்யா. இதில் சவுந்தர்யா சில வருடங்களுக்கு முன் அஸ்வின் குமார் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு வீர் என்கிற மகன் இருந்த நிலையில் கணவரிடமிருந்து பிரிந்தார். அதன்பின் வணங்காமுடி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிரிந்தார்.

அவ்வப்போது குடும்ப விழாக்களில் அனைவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பதுண்டு. அதேபோல், ரஜினியின் புதிய படங்கள் வெளியாகும்போதும் தியேட்டரில் எல்லோரும் ஒன்றாக படம் பார்க்கப்போவதுண்டு. இந்நிலையில்தான் இன்று ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: விஷாலையே ஓவர்டேக் செய்த சிம்பு!.. இன்னும் அஜித் மட்டும் தான் பாக்கி.. விஜயகாந்த் வீட்டில் எஸ்டிஆர்!

லால் சலாம் படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, கிரிக்கெட் எனும் விளையாட்டில் மதமும், அரசியலும் எப்படி நுழைகிறது என்பதை ஐஸ்வர்யா திரைக்கதையாக அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

இப்படம் தொடர்பான புகைப்படங்கள் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள மாவீரன் நந்த சாய்ராம் கல்லூரியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

veer

இந்த விழாவில் சௌந்தர்யாவின் மகன் வீர் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார். அவரை கேமரா ஜூம் பண்ணி திரையில் காட்டியதும் தாத்தா ரஜினி படையப்பாவில் செய்வது போல ஸ்டைலை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதை ரஜினி ரசிகர்கள் பலரும் பகிர்ந்து க்யூட் வீடியோ என பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ ‘அடுத்த ஹீரோ ரெடி’ எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story