விஜய்க்கு ஈடுகொடுக்கும் ரஜினி....! எண்ணம் பெருசு ஆனா நடக்குனுமே..?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமா உலகின் மிகப்பெரிய ஜாம்பவான். வயசானாலும் ”இன்னும் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல” இந்த டையலாக் சொல்லியே கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகியும் இன்னும் தன்னுடைய ஸ்டைலாலும் அழகாலும் சினிமாவை ஆட்கொண்டு வருகிறார்.
80 களில் தொடங்கி இன்று வரை ரசிகர்களை அதே போக்கில் என்டர்டெய்ன்மெண்ட் பண்ணி வருகிறார். அதனால் தான் உச்சத்தில் எவரும் அசைக்க முடியாத இடத்தில் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார்.
இவர் சினிமா வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது ஆர்.கே.செல்வமணி ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணலானு ரஜினியிடம் போய் கேட்டாராம்.
அதற்கு ரஜினி படம் எப்படி வருது இருக்குனு அத பத்தி யோசிக்கல, என்ன நம்பி வரும் புரொடியூசர்களுக்கு என்னால் லாபம் தான் கிடைக்கனுமே தவிர நஷ்டம் வரக்கூடாது அத மட்டும் பாத்துங்கோங்கனு ரொம்பவும் அக்கறையுடன் சொல்லியிருக்கார். இவரின் இந்த எண்ணம் தான் நடிகர் விஜய்யை கொண்டாடும் அதே ரசிகர்கள் ரஜினியையும் வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். இந்த எண்ணம் ஒரு நடிகர்க்கு மட்டும் இல்லை படம் பண்ணும் இயக்குனர்களுக்கும் வேண்டும் என பிரவீன் காந்தி கூறினார்.