Connect with us
rajini

Cinema History

ஜோதிகாவை பார்த்து ரஜினி சொன்ன வார்த்தை!. அட அப்படியே நடந்துச்சே!. தலைவரு தீர்க்கதரிசிதான்!..

Chandramukhi: ஒரு துறையில் பல வருடம் இருப்பவர்கள் சில விஷயங்களை கணித்தால் அது அப்படியே நடக்கும். தனது அனுபவங்கள் மூலம் கிடைக்கும் அறிவை வைத்து அப்படி பல விஷயங்களை எல்லோரும் கணிக்க முடியும். சினிமாவில் அப்படி பலரும் இருக்கிறார்கள். அதில் ரஜினியும் ஒருவர்.

ராகவா லாரன்ஸ் வாலிப வயதில் இருக்கும்போது அவரின் நடன திறமையை பார்த்து ‘இவன் பின்னாளில் பெரிய நடன நடிகராக வருவான்’ என கணித்து பிரபுதேவாவிடம் சேர்த்துவிட்டார். அது அப்படியே நடந்தது. அதேபோல், புதிய பாதைக்கு முன் ரஜினியை வைத்து படம் இயக்க பார்த்திபன் ஆசைப்பட்டபோது அந்த தயாரிப்பாளரிடம் ‘நீங்கள் பார்த்திபனை ஹீரோவாக போட்டு படம் எடுங்கள்’ என சொன்னது ரஜினிதான்.

இதையும் படிங்க: லோகேஷுக்கு போன் செய்த ரஜினி! லவுட் ஸ்பீக்கரில் போடச் சொல்லி தலைவர் சொன்ன விஷயம்

‘இப்போது நினைத்தால் இது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இயக்குனராகும் ஆசையில் இருந்த என்னை பார்த்து எனக்குள் இருந்த நடிகரை கண்டுபிடித்தவர் அவர்தான் என பார்த்திபனே ஊடகம் ஒன்றில் பேசியிருந்தார். அவ்வளவு ஏன்? பிகில் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சமூக ஊடங்களில் அப்படத்தின் இயக்குனர் நெல்சனை பலரும் ட்ரோல் செய்தனர். ஆனால், அவரால் ஒரு வெற்றிபடத்தை கொடுக்க முடியும் என நம்பித்தான் ரஜினி அவரின் ஜெயிலர் பட கதையில் நடித்தார். அவர் நினைத்தது போலவே அப்படம் சூப்பர் ஹிட் அடித்து பல நூறு கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: கலைஞரின் வசனத்தில் நடிக்க மறுத்த ரஜினி!.. காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!..

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருப்பது சந்திரமுகிதான். பி.வாசு இயக்கிய இந்த திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்திருந்தார். ஒருமுறை படப்பிடிப்பில் ஜோதிகாவின் கண்களை க்ளோசப் காட்சி எடுத்துக்கொண்டிருந்தார் பி.வாசு.

அப்போது அங்கே வந்த ரஜினி ஜோதிகாவின் கண்களை மானிட்டரில் பார்த்துவிட்டு ‘இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும். அதற்கு ஜோதிகா முக்கிய காரணமாக இருப்பார்’ என சொன்னாராம். அவர் சொன்னதுபோலவே சந்திரமுகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஒரு தடவ சொன்னா!. வசனத்தை ரஜினி எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.. தலைவரு செம ஷார்ப்!…

google news
Continue Reading

More in Cinema History

To Top