வீட்டில் ஒரு முகம்.. வெளியே ஒரு முகம்!.. ரஜினி வீட்டில் நடப்பது என்ன?...

by சிவா |
rajini
X

Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்பே சென்னை போயஸ்கார்டன் பகுதியில் வீடு கட்டி குடியேறினார். லதாவை திருமணம் செய்து கொண்டது முதல் இப்போது வரை அந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். ஆனால், அவரின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவுக்கு சென்னையின் சில பகுதிகளில் வீடு வாங்கி கொடுத்திருக்கிறார்.

தனுஷுடன் வாழவில்லை என்றாலும் ஐஸ்வர்யா தனி வீட்டில்தான் வசித்து வருகிறார். அவ்வப்போது அப்பா - அம்மாவை பார்த்து விட்டு செல்கிறார். அதுபோலத்தான் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவும். கணவருடன் தனி வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருனு நினைச்சு என் ஸ்டார இழந்துட்டேன்! ரஜினி படத்தால் கெரியரை இழந்த நடிகை

ரஜினி தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டின் முழு நிர்வாகத்தையும் அவரின் மனைவி லதாவே பார்த்துக்கொள்கிறார். அங்கு எல்லா முடிவையும் எடுப்பது அவர்தான். ரஜினியை யாராவது சந்திக்க விரும்பினால் அதை பரிசீலிப்பது அவர்தான். அப்படி பார்க்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும்?.. எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்? என்பதெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

ரஜினி வீட்டில் இருக்கும்போது ஒரு முகமும், வெளியே ஒரு முகமும் காட்டுவார் என சில பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள். மரியாதை நிமித்தமாக ரஜினியை யாராவது சந்திக்க விரும்பினால் பரிசீலனைக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள். டீயோ, காபியோ வரும். அதிகபட்சம் 2 நிமிடம். ரஜினி வருவார்.. ‘நல்லா இருக்கிங்களா?’ என இரண்டு வார்த்தை பேசுவார். அவ்வளவுதான். அதற்கு மேல் சென்றுவிடுவார்.

இதையும் படிங்க: உள்ளே போனா வெளியே போக முடியாது!.. ரஜினியின் பண்ணை வீட்டில் நடப்பது என்ன?!..

அதே ரஜினி, ஒருவரை சந்திக்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வர சொன்னால் அங்கே மிகவும் ஜாலியாக எல்லாவற்றையும் பேசுவார். தனது வாழ்க்கை, வெற்றி தோல்வி, வாழ்வில் சந்தித்த அனுபவங்கள், நடப்பு அரசியல் என எல்லாவற்றையும் பேசுவாராம்.

இந்த தகவலை ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார். அதேபோல், கோபப்பட்டுவிட்டால் வாய்க்கு வந்ததை பேசிவிடுவோம் என்பதால் விமான நிலையங்களில் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கும்போது சிரித்த முகத்துடனே சென்றுவிடுவார் எனவும் அவர் சொல்லி இருக்கிறார்.

Next Story