ஒரு தம் அடிக்கிறதுக்காக இயக்குனரிடம் போராடிய ரஜினி..! அந்த அளவுக்கு கெடுபிடியான இயக்குனரா அவரு...?
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் சினிமாவின் வாழ்க்கையில் மிக முக்கிய மைல் கல்லாக இருந்த படம் அண்ணாமலை. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. ஆண்டுகள் போனாலும் அண்ணாமலை படத்தின் மீதுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையவில்லை.
இந்த படத்தின் மூலம் முதன் முதலாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார் நடிகை குஷ்பூ. மேலும் ஜனகராஜ், மனோரமா , ராதாரவி உட்பட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்தனர். இந்த படத்திற்கு மேலும் வலுவூட்டியது படத்தின் இசை மற்றும் பாடல்கள்.
இந்த படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. முதலில் பிரபல இயக்குனராக இருந்த வசந்த் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் படத்தின் இரண்டு நாள்கள் முன்னாடிதான் விலகினாராம். ஆதலால் இந்த படத்தை இயக்கும் பொறுப்பு சுரேஷ் கிருஷ்ணாவுக்கு சென்றது.
இந்த செய்தியை அறிந்த ரஜினி சுரேஷ் கிருஷ்ணாவை நினைத்து பயந்தாராம். இவர் முன்னாடி சிரிக்கமுடியாது, உட்காரமுடியாது, தம் அடிக்க முடியாது என மிகவும் பயந்தாராம். அவரிடம் நேரடியாகவே சொன்னாராம். வேண்டாம் என்று. அதன் பின் இவர் தான் இயக்கப்போகிறார் என அதிகாரப்பூர்வமாக முடிவானதுக்கு அப்புறம் ரஜினி அமைதியாக அவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாராம். இதை ஒரு மேடையில் ரஜினியே கூறினார்.