காமெடி நடிகருக்காக அந்த பழக்கத்தையும் பழகி கொண்ட ரஜினி....அட இப்பதான் தெரிஞ்சது!.....
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 80களில் ஆரம்பத்த இவரது திரைவாழ்க்கைப் பயணம் இன்று வரை அதே மனப்பான்மையுடனும் அதே ஸ்டைலுடனும் தொடர்ந்து கொண்டே வருகிறது. எந்த ஒரு நடிகைகளின் கிசுகிசுப்பிலும் சிக்காத நடிகர் என்றும் கூறலாம்.
சினிமாவிற்கு அப்பாற்பட்டு இவரை திரைக்குப் பின்னால் ரசிப்பவர்களும் திரைவட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் வசனகர்த்தாவும் நடிகருமான கிரேஸி மோகன். இவர் தற்பொழுது நம்முடன் இல்லாவிட்டாலும் இவர் ரஜினியை பற்றிய கூறிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல காமெடி வெற்றிப் படங்களை கொடுத்தவர் கிரேஸி மோகன். இவர் ஒரு சமயம் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றுள்ள சமயத்தில் கூடவே ஒரு பையையும் கொண்டு போய் உள்ளார். வீட்டிற்கு போனதும் ரஜினி இவரை உபசரித்து இவரை உட்காரவைத்தாராம். அப்போது ரஜினி என்ன அந்த பையில்? என்று கேட்டாராம். கிரேஸி மோகனுக்கு வெற்றிலை பாக்கு போடுகிற பழக்கம் இருப்பதால் போகும் இடமெல்லாம் கொண்டு போய்விடுவாராம். அதே போல தான் அன்றும் ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார்.
ரஜினி சரி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூற அவர் ரஜினியின் வீட்டை சுற்றி பார்த்து எல்லாம் சுத்தமாக இருக்கிறது என்று நினைத்து சங்கோஜப் பட்டுக்கிட்டு போடாமல் இருந்தாராம். உடனே ரஜினி வெற்றிலையை எடுத்து அவர் போட்டுக் கொண்டாராம். அப்போதுதான் கிரேஸியும் போடுவார் என இவர் போட்டாராம். அதுவரை ரஜினிக்கு எந்த பழக்கமும் இருந்ததில்லையாம். இவருக்காக முதல் முறையாக வெற்றிலை பாக்கை போட்டாராம் ரஜினி.