சிவாஜி படப்பிடிப்பில் ரஜினி செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடன கலைஞர்கள்!…

Published on: August 20, 2023
rajini
---Advertisement---

திரையுலகில் பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. 80களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக மாறியவர் இவர். துவக்கத்தில் கமலுடன் மட்டுமே இணைந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

துவக்கம் முதலே ஆக்‌ஷன் படங்களில் நடித்து ஹிட் படங்களை கொடுத்தார். எம்.ஜி.ஆர் படங்களுக்கு பின் ரஜினியின் படங்கள் வசூலை வாரிக்குவித்ததால் வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் ரஜினியை சூப்பர்ஸ்டார் மற்றும் வசூல் மன்னன் என அழைத்தனர். ஒருபக்கம் புவனா ஒரு கேள்விக்குறி, தப்புத்தாளங்கள், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, ஜானி, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களிலும் நடித்தார்.

இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த கபாலி!.. ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னாடி ரஜினி இப்படி பண்ணியிருந்தா? அவ்ளோதான்!..

தற்போது நெல்சனின் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ரஜினியின் கடந்த கால சில படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில் ஜெயி்லர் வெற்றி ரஜினியையும், அவரின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. விக்ரம் பட வசூலை தாண்டிவிட்ட ஜெயிலர் விரைவில் பொன்னியின் செல்வன் வசூலையும் தாண்டிவிடும் என கணிக்கப்படுகி்றது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் தாறுமாறா கலெக்‌ஷனை அள்ளும் ஜெயிலர்!.. அட காரணம் இதுதானாம்!…

ஏவிஎம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த திரைப்படம் சிவாஜி. இப்படம் 2007ம் வருடம் வெளியானது. இப்படத்தின் துவக்கத்தில் பல்லேலக்கா என்கிற பாடல் வரும். ரஜினியியுடன், நயன்தாரா நடனமாட துணை நடிகர்கள் பலர் பானை உள்ளிட்ட சில ஓவியங்களை பெயிண்டால் வயிற்றில் வரைந்துகொண்டு நடனமாடுவார்கள்.

வடமாநிலத்தில் உச்சி வெயிலில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி அது. வயிற்றில் இருக்கும் பெயிண்ட் உருகி மிகவும் சிரமமாக இருந்ததாம். என்னதான் சம்பளம் வாங்கி கொண்டு அந்த காட்சியில் நடித்தாலும் அது மிகவும் கஷ்டமான வேலை. இதை கண்ணால் பார்த்த ரஜினி உடனே சென்னையிலிருந்து 40 லட்சம் வரை வரவழைத்து அவர்கள் எல்லோருக்கும் கவரில் குறிப்பிட்ட தொகையை வைத்து கொடுத்தாராம்.ரஜினியின் இந்த செயல் அந்த நடன கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததாம்.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்துல வரும் அந்த வசனம் தனுஷுக்குதான்!.. தலைவரின் மைண்ட் வாய்ஸை சொன்ன இயக்குனர்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.