More
Read more!
Categories: Cinema News latest news

என்ன இருந்தாலும் மருமகன் இல்லையா? தனுஷுக்காக அந்த விஷயத்தில் மறைமுகமாக உதவிய ரஜினி

நடிகர் தனுஷ் தன்னுடைய 50 வது படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார். அந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் படம் தான் இது. இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தனுஷின் அண்ணனும் நடிகரும் இயக்குனருமான செல்வராகவனும் நடிக்கிறாராம்.

rajini1

சமீபத்தில் தான் திருப்பதியில் குடும்பத்தோடு சென்று தனுஷ் மொட்டை அடித்து அவரது வேண்டுதலை நிறைவேற்றினார். இந்தப் படத்திலும் அதே மொட்டைத்தலையுடனும் தான் நடிக்கிறாராம். ரெட், வேதாளம் போன்ற படங்களில் லேசாக முடி வளர்ந்து மொட்டை தலையுடன் வரும் அஜித்தை போன்றே இந்தப் படத்திலும் தனுஷ் நடிக்கிறாராம்.

Advertising
Advertising

இதையும் படிங்க : ‘மாவீரன்’ படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்! இந்த நடிகரா? ஒழிச்சு வச்சு வேடிக்கை பார்த்த படக்குழு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆதித்யராம் ஸ்டூடியோவில் தான் எடுக்க இருக்கிறார்களாம். அதுவும் இந்தப் படத்திற்காக ஒரே ஒரு லொக்கேஷனில் தான் தனுஷ் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதற்காக அந்த ஸ்டூடியோவில் 100 வீடுகள் கொண்ட செட்டை அமைப்பதாக இருந்ததாம். அதற்காக கோடிக்கணக்கில் செலவும் திட்டமிடப்பட்டிருந்ததாம்.

ஆனால் அதே ஸ்டூடியோவில் தான் சமீபத்தில் ரஜினியின் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பும் நடந்து முடிந்திருக்கிறது. ஜெய்லர் படத்திற்காகவும் அங்கு போட்ட செட் அப்படியே தான் இருந்ததாம். அதனால் அந்த செட்டை  கொஞ்சம் மாற்றியமைத்து தனுஷின் படப்பிடிப்பை எடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம்.

rajini2

ஆக மொத்தம் எப்படியோ ரஜினியால் தனுஷுக்கு ஒரு நல்லது நடந்தால் சரி என்று ரசிகர்கள் கூறுகின்றனர். முழுவதுமாக செட் போட்டால் ஏகப்பட்ட செலவுகள் ஆகும். ஆனால் இருக்கிற செட்டையே மாற்றியமைத்து போடும் போதும் கொஞ்சம் செலவு குறைய வாய்ப்பிருக்கிறதால் இப்படி ஒரு ஐடியாவை யோசித்திருக்கிறார்கள் படக்குழு.

இதையும் படிங்க :தெருவில் நின்ற சைக்கிளை எடுத்து சென்ற எம்.ஜி.ஆர்.. படப்பிடிப்பில் நடந்த களோபரம்…

Published by
Rohini

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

9 hours ago