ஸ்டண்ட் மாஸ்டர் செய்த ஊழல்!.. கால் உடைந்து அவதிப்பட்ட பொன்னம்பலம்.. கை கொடுத்த சூப்பர் ஸ்டார்!..

Published on: June 23, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பொன்னம்பலம். ஸ்டண்ட் மேனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறியவர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவின் ரியல் ஹீரோக்கள் என்றால் அது இந்த ஸ்டண்ட் மேன்கள்தான்.

உண்மையிலேயே சினிமாவில் அடிவாங்கி, மிதிவாங்கி பெரும் இன்னல்களுக்கு உள்ளானாலும் அந்த விஷயங்கள் பெரிதாக வெளியே தெரியாது. வில்லனாக நடிப்பதற்கு முன்பு பொன்னம்பலம் ஸ்டண்ட் மேனாக நடித்து வந்த காலத்தால் அதில் நடந்த பல தவறுகளை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ponnambalam
ponnambalam

ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி திரைப்படத்தில் சண்டை காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் பொன்னம்பலம். படத்தின் இயக்குனர் வாசுவிற்கும் பொன்னம்பலத்திற்கும் நல்ல பழக்கம் இருந்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது.

பொன்னம்பலத்திற்கு நேர்ந்த கொடுமை:

ஆனால் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான விக்ரம் தர்மாவிற்கும் பொன்னம்பலத்திற்கும் இடையே பிரச்சனை இருந்தது. எனவே உழைப்பாளி படத்தில் அவர் நடிக்க கூடாது என விரும்பினார் விக்ரம் தர்மா. இதற்காக பொன்னம்பலத்திற்கு மட்டும் தனியாக சண்டை காட்சி வைத்து அதில் பொன்னம்பலம் விழும் வலையை ஒழுங்காக கட்டாமல் விட்டுவிட்டனர்.

இதனால் கீழே விழுந்ததும் பொன்னம்பலத்தின் ஒரு கால் முழுவதுமாக உடைந்துவிட்டது. அதற்கு பிறகு ரஜினியிடமும், வாசுவிடமும் பொன்னம்பலத்தை குறித்து தப்பு தப்பாக கூறி படத்தில் வேறு ஆளை போட்டு உழைப்பாளி படத்தை படமாக்கினார் விக்ரம் தர்மா.

uzhaipaali
uzhaipaali

அடிப்பட்ட பொன்னம்பலம் ஒரு வருடம் சிகிச்சையில் இருந்தார். இந்த நேரத்தில் கஷ்டத்தில் இருந்த பொன்னம்பலம் தனது வீடு வரை அடகு வைத்துவிட்டார். மிக தாமதமாகவே இந்த விஷயம் ரஜினிக்கு தெரிந்தது.

பொன்னம்பலம் சரியாகி வந்ததுமே அவரை கே.எஸ் ரவிக்குமாரிடம் அழைத்து சென்று அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து 5 லட்ச ரூபாய் சம்பளமும் வாங்கி தந்துள்ளார் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை பொன்னம்பலம் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 18 வயசுல கல்யாணம்! 23 வயசுல விவாகரத்து! எம்.எஸ்.வியின் மருமகளுக்கு நேர்ந்த கொடுமை..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.