Connect with us
sac

Cinema News

நன்றி மறந்த எஸ்.ஏ.சி… மறக்காமல் உதவிய ரஜினி… ஒரு தயாரிப்பாளரின் நெகிழ்ச்சி…

திரையுலகில் ஒருவர் மேலே வர பலரும் உதவி செய்ய வேண்டும். இல்லையேல் எவ்வளவு திறமை இருந்தாலும் மேலே வர முடியாது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் முன் வேண்டும். அல்லது, தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்ய தெரிந்தவர்கள் முன்வர வேண்டும். அப்படித்தான் வாய்ப்புகள் கிடைக்கும்.

நடிகராக வேண்டும் என ஆசைப்பட்ட விஜயை அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சொந்த செலவில் படங்களை தயாரித்து, இயக்கி சில படங்களில் நடிக்க வைத்தார். ஆனால், மற்ற தயாரிப்பாளர்கள் யாரும் விஜயை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை. ஏனெனில் அப்போது ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்கள் பீக்கில் இருந்த காலம் அது. விஜயின் அப்பா எஸ்.ஏ.சி பல தயாரிப்பாளர்களின் அலுவலகத்திற்கு நேரில் சென்று ‘என் மகனை வைத்து படம் எடுங்கள்’ என வாய்ப்பு கேட்டு அலைந்தார்.

sac

sac

இந்த இடத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்வோம். பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியை முதன்முதலில் ஹீரோவாக வைத்து படம் எடுத்தவர் தயாரிப்பாளர் கலைஞானம். இவர் கதாசிரியரும் கூட. பல திரைப்படங்களின் கதை விவாதங்களில் பங்கெடுத்தவர். இவரின் பல கதைகள் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

இவர் விஜய்க்கு உதவியது பற்றி சொன்ன விஷயத்தைதான் இங்கே கூறப்போகிறோம். விஜயின் அப்பா எஸ்.ஏ.சி என்னிடம் வந்து ‘எப்படியாவது என் மகன் விஜயை பெரிய நடிகனா உருவாக்கணும். அதற்கு நீங்கதான் உதவி பண்ணனும்” என கேட்டார். நானும் நிறைய தயாரிப்பாளர்களிடம் பேசினேன்.

மேலும், சில இயக்குனர்களை சந்தித்து நானே சில கதைகளை கொடுத்து உதவி செய்தேன். ஒரு காலகட்டத்தில் விஜய் நல்லா வளர்ந்துவிட்டார். அப்போது நான் வசிக்க வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டேன். எஸ்.ஏ.சி-யிடம் சென்று விஐய் நிறைய வீடு வாடகைக்கு தருகிறார் என கேள்விப்பட்டேன் எனக்கு ஒரு வீடு வாடகைக்கு வாங்கி கொடுங்க’ன்னு கேட்டேன். அதற்கு அவர் ‘இல்ல சார். இத நான் விஜய்க்கிட்ட கேட்க முடியாது.. விஜய் தரமாட்டார்’னு சொல்லி தட்டி கழித்துவிட்டார்.

rajini

rajini

எனக்கு மனசு மிகவும் கஷ்டமா ஆகிவிட்டது.. நாம் செய்த உதவியை விஜயும் அவரின் அப்பாவும் இப்படி மறந்துவிட்டார்களே என நினைத்து அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. சரி அவங்க மனசு அவ்வளவுதான்னு நானே மனச தேத்திக்கிட்டேன். ரஜினியை நான்தான் முதன் முதலில் ஹீரோவாக எப்பவோ நடிக்க வச்சேன். அதற்கு பின் அவரை பார்க்க கூடவில்லை. ரஜினியும் சூப்பர்ஸ்டாராகி பெரிய இடத்துக்கு சென்றுவிட்டார்.

நான் சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன் என்கிற விபரம் ரஜினிக்கு தெரியவர ஒரு சினிமா விழாவில் ‘என்னை ஹீரோவாக்கிய கலைஞானம் சாருக்கு நான் புதிய வீடு வாங்கித்தருவேன்’ என அறிவித்தார். கூறியதை போலவே வீடும் வாங்கி கொடுத்து ‘ இது உங்கள் வீடு. உங்க ஆயுள் முழுவதும் நீங்கள் இந்த வீட்டில் இருக்கவேண்டும்’ என சொன்னார். ரஜினிக்கு பெரிய மனசு. இது மத்தவங்ககிட்ட இல்ல’ என கலைஞானம் பேசியிருந்தார்.

rajini

rajini

விஜய்தான் சூப்பர்ஸ்டார் என தற்போது விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தியை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘தனக்கு உதவி செய்த முன்வந்தவருக்கு வாடைக்கு கூட வீடு கொடுக்காத விஜய் சூப்பர்ஸ்டாராக இருந்துவிட்டு போகட்டும். ஆனால், தனக்கு ஹீரோ வாய்பு கொடுத்தவருக்கு சொந்தமாகவே வீடு வாங்கிக் கொடுத்த ரஜினி வெறும் நல்ல மனிதராக இருந்துவிட்டு போகட்டும்’ என சில ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னதான் கெத்தா இருந்தாலும் உள்ளுக்குள்ள பயமிருக்கும்ல!.. அஜித் சொன்ன அந்த வார்த்தை…

google news
Continue Reading

More in Cinema News

To Top