1000 படங்களுக்கு மேல் நடித்த நடிகைக்கா இந்த நிலைமை? – ரஜினியிடம் கையேந்தி நின்ற சம்பவம்

Published on: May 24, 2023
rama
---Advertisement---

தமிழ் சினிமாவில் அனைவர் நெஞ்சங்களிலும் குடிகொண்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 50 வருடங்களாக சினிமாவில் ஒரு ராஜ்ஜியத்தை நிலை நாட்டி வருகிறார். அவர் கட்டிய கோட்டை என்றே சொல்லலாம். அந்தக் கோட்டையை இதுவரை யாராலும் உடைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் ரஜினி.

வசூலில் எம்ஜிஆருக்கு அடுத்தப் படியாக வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார் ரஜினி. 70 வயதை கடந்தாலும் இன்று வரை இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்க கூடிய வகையில் சும்மா ராஜ நடை போட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது கூட அவருக்கு கைவசம் மூன்று படங்கள் வரிசை கட்டி கொண்டு நிற்கின்றன. ஜெய்லர் படத்தில் நடித்து முடித்து விட்டு தன் மகளின் இயக்கத்தில் லால்சலாம் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் ரஜினி. ஓய்வு எடுக்கின்ற வயதிலும் இன்னும் அதே சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

rama3
rama3

இந்த நிலையில் ரஜினி ஒரு நடிகைக்கு செய்த உதவியை பற்றி மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார். கிட்டத்தட்ட அந்த நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 1000 படங்களுக்கும் மேல் நடித்தவராம். சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் இருந்திருக்கிறார்.

பெரும்பாலான படங்களில் வெடுக்குத்தனமாக பேசக்கூடிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடிக்கக் கூடியவர். இப்படி பல புகழை அடைந்த நடிகை ஒரு நேரம் எந்த வித பணமும் இல்லாமல் கட்டிய புடவையுடன் நடிகர் ரஜினியை போய் சந்திந்திருக்கிறார். நேராக அவரை பார்த்து ‘இப்பொழுது என்னிடம் எதுவும் இல்லை, சொந்த ஊருக்கு போவதற்கு கூட காசு இல்ல்லை, நிராயுதபாணியாக கட்டிய புடவையுடன் தான் வந்திருக்கிறேன், எதாவது உதவி செய்யுங்கள் ’ என்று சொன்னாராம்.

rama2
rama2

உடனே ரஜினி தன் பக்கத்தில் இருந்த 40000 ரூபாயை கையில் கொடுத்து அடுத்து என்ன பண்ண வேண்டுமோ அந்த வேலையை பாருங்கள் என்று சொல்லி அனுப்பினாராம். ஆனால் இதை சற்றும் எதிர்பாராத அந்த நடிகை ஊருக்கு போக காசு கொடுப்பார் என்று தான் நினைத்தாராம். ஆனால் இவ்ளோ தொகையை கொடுப்பார் என்று நினைக்க வில்லையாம். அதை வைத்து அடுத்த கட்ட வேலையை பார்க்க ஆரம்பித்தாராம் அந்த நடிகை. அவர் வேறு யாருமில்லை. நேற்று நம்மை விட்டு பிரிந்த சரத்பாபுவின் முதல் மனைவியான நடிகை ரமாபிரபாதானாம். இந்த செய்தியை செய்யாறு பாலு கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.