தோல்வி நேரத்தில் விஜயகாந்துக்கு கைகொடுத்த ரஜினி...அட அது சூப்பர் ஹிட் படமாச்சே!....
பொதுவாக நடிகர்களுக்குள் போட்டி பொறாமைகள் இருக்கவே செய்யும். இது தமிழ் சினிமாவில் மட்டுமில்லை. ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என எல்லா திரையுலகிலும் இது இருக்கிறது.
நாம் நடிக்கும் திரைப்படம் ஹிட் ஆக வேண்டும். போட்டி ஹீரோ நடிக்கும் படம் பிளாப் ஆக வேண்டும் என ஆசைப்படும் நடிகர்கள் பலர் இருக்கிறார். ஆனால், இதையெல்லாம் தாண்டி சில நடிகர்கள் நண்பர்களாக இருப்பார்கள். தங்களுக்குள் உதவிகளும் செய்து கொள்வார்கள்.
ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் திரைப்படங்களில் போட்டி போட்டாலும் நிஜ வாழ்க்கையில் நண்பர்களாகத்தான் இருந்தனர். ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்து கொண்டனர். அப்படி விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் உதவிய ஒரு சம்பவத்தைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
87-களில் விஜயகாந்த் நடித்த சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்த காலம். அப்போது ஹிந்தியில் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ரஜினி வாங்கினார். ஆனால், இந்த கதையில் தன்னை விட விஜயகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கருதிய ரஜினி, கலைப்புலி எஸ் தாணுவை அழைத்து இந்த கதையை விஜயகாந்தை வைத்து எடுங்கள் என கூற, அப்படி வெளியான திரைப்படம்தான் கூலிக்காரன்.
இது விஜயகாந்துக்கு ஹிட் படமாக அமைந்தது. இதில், விஜயகாந்துக்கு ஜோடியாக ரூபிணியும், வில்லனாக ராதாரவியும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தது.