ரஜினியை பத்தி பேசுறது எல்லாம் தப்பு - பப்ளிசிட்டி பண்ணிக்கல!.. வெளிச்சம் போட்டு காட்டிய நடிகர்
தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உண்டான ரசிகர்கள் பட்டாளம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஒரு தலைவனாகவே மக்கள் இவரை கொண்டாடுகின்றனர்.
அந்த அளவுக்கு தலைவா தலைவா என்று தங்கள் மூச்சிரைக்க ரஜினியை கொண்டாடித் தீர்க்கின்றனர். மேலும் தன் படங்களின் மூலமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே ரசிகர்கள் ஒரு திருவிழா போலவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இவரின் நடிப்பில் ஜெயிலர் மற்றும் லால் சலாம் போன்ற படங்களை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்களை பூர்த்தி செய்வது தன்னுடைய கடமை என்று ரஜினி குறிக்கோளாக கொண்டு வருகிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினியை பற்றி அவ்வப்போது சில சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. கோடி கோடியாக சம்பாதிச்சு யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார் என்றும் சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .மேலும் அவர் நினைத்தால் எத்தனையோ குழந்தைகளை படிக்க வைக்கலாம் என்றும் பல பேருக்கு உதவிகள் செய்யலாம் என்றும் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான அனுமோகன் ரஜினியை பற்றி ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறினார். அதாவது படம் சம்பந்தமாக ரஜினி வீட்டுக்கு அவ்வப்போது அனுமோகன் போவாராம். அந்த சமயத்தில் ஏகப்பட்ட பேர் வரிசையில் நின்று கொண்டு இருப்பார்களாம்.
அவர்கள் ஏற்கனவே ரஜினியிடம் உதவி கேட்டு அணுகியிருப்பார்களாம். அவர்களை ஒருநாள் தன் வீட்டிற்கு வரவழைக்க சொல்லுவாராம் .திருமண உதவி, குழந்தைகள் படிப்பிற்கான உதவி என்று நிறைய பேர் வரிசை கட்டிக்கொண்டு நிற்பார்களாம் .அவர்களை உள்ளே அழைத்து தட்டு தட்டாக பணங்கள், பழங்கள், ஆடைகள் என வைத்து அவர்களை முழு திருப்தியோடு வழி அனுப்பி வைப்பாராம் ரஜினி.
இதைக் குறிப்பிட்டு பேசிய அனு மோகன் ரஜினியை பற்றி பேசுவது எல்லாம் தவறு என்றும் அதை அவர் பப்ளிசிட்டி பண்ண வில்லை என்றும் ஏகப்பட்ட பேருக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார் என்றும் கஷ்டப்பட்டவர்களுக்காக இலவசமாகவே நிறைய படங்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : கமலுக்கு மட்டும் இப்படி ஒரு சலுகையா? சிவாஜியை ஏமாற்றிய ஏ.வி எம் நிறுவனம்!..