More
Categories: Cinema History Cinema News latest news

நண்பர் ராஜ்பகதூர் செய்த மாற்றம்… ரஜினியை நடிகனாக்கிய அந்த ஸ்பெஷல் நிகழ்வு…

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ராஜ்பகதூர் இருவருக்கும் அழகான நட்பு இருந்தது. இது அவர் ரசிகர்கள் எல்லாருக்குமே தெரியும். ஆனால் அவர் ஆரம்ப காலமே ரஜினிக்குள் இருந்த நடிப்பு அரக்கனை தட்டி எழுப்பியதும் அவர் தான். இதுகுறித்து ஆச்சரிய தகவல்கள்.

ரஜினிக்கும், ராஜ்பகதூரும் நெருக்கமாக இருந்ததுக்கு காரணம் அவர்கள் இருவருக்கும் சிவாஜியை பிடிக்கும். இருவருமே சிவாஜியின் ரசிகர்கள். ராஜ்பகதூருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. ராஜ்பகதூருக்கு குருஷேத்திரம் நாடகம் போடும் பழக்கம் இருந்தது. அப்போது குண்டாக இருந்த ரஜினியை துரியோதனனாக களம் இறக்கினார். 

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்ல! சாய்பாபா கோயில் இவர் கட்டியதே இல்லையாம்.. அப்புறம் எதுக்கு இந்த வேஷம்

ஆனால் ரஜினிக்கு அப்போ நடிக்கும் ஆர்வம் இல்லையாம். கவலைப்படாதே. கைத்தட்டல் கிடைக்கும். ரிகர்சல் பண்ணித்தான் நடிக்கப் போறே என சமாதானம் செய்து நடிக்க வைத்தாராம் ராஜ்பகதூர். முதன் முறையாக ரஜினியை நாடக மேடைக்கு அழைத்துச் சென்ற பெருமை ராஜ்பகதூரைச் சேரும்.

சிவாஜி ஸ்டைல், என்.டி.ராமராவ் ஸ்டைல் இரண்டையும் கலந்து, ஒத்திகையில் நடித்தாராம். ஆனால் அங்கிருந்த நாடக மாஸ்டர்கள் அதுக்கு கட்டுப்பாடு விதித்தனராம். இதில் கடுப்பான ராஜ்பகதூர் நம்ம என்ன போட்டிக்கா போறோம். அவன் இஷ்டத்துக்கே நடிக்க விடுங்களேன் எனக் கூறிவிட்டாராம். அதன்பின், ரஜினியின் நடிப்பை ஆஹாஓஹோ என புகழ்ந்தாராம். 

இதையும் படிங்க: ரஜினியை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என அழைத்த அறிமுக நடிகை!.. பதட்டமான படப்பிடிப்பு!..

எப்பையும் அவரை திட்டிக்கொண்டு இருக்கும் ராஜ்பகதூர், அன்னைக்கு பாராட்டியது ரஜினிக்கு சந்தோஷமாகிவிட்டதாம். அவர் பாராட்டுக்காகவே நடித்தாராம். அப்போதில் இருந்து ரஜினியை நடித்துக்கொண்டு இரு என்றே சொல்வாராம். அந்த துரியோதனன் நாடகத்தில் ரஜினியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் முதல் நாளே அவரை தனியாக பார்க்க கூட்டம் கூடிய சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts