மூட்டை தூக்குன உடம்பு இது!.. என்ன யாருனு நினைச்சீங்க?.. மாஸ்டரை கதிகலங்க வைத்த ரஜினி!..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உலகமே போற்றக்கூடிய நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் சினிமா துறையில் இருக்கும் வேறெந்த நடிகருக்கும் இருந்ததில்லை. ஒட்டுமொத்த இந்திய சினிமாவையுமே தன் வசம் வைத்திருக்கிறார் ரஜினி.
குடும்பங்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே கொண்டாடப்படும் நடிகராக ரஜினி வலம் வருகிறார். ஆரம்பத்தில் ஏதோ ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின் வில்லன் கதாபாத்திரம், இரண்டாவது நாயகன், கதையின் நாயகன், ஹீரோ, சூப்பர் ஸ்டார் என ரஜினியின் வளர்ச்சி அளப்பறியாதது.
தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் மூலமாக ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரஜினிக்கு என்று ஒரு தனி மாஸே இருக்கின்றது. பிரபலங்கள் பலருக்கும் பிடித்தமான நடிகராகவும் இருக்கிறார்.
எதார்த்தமான பேச்சும், பழக்க வழக்கமும் மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாகவே அமைகிறது. தற்போது ரஜினி ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகளவே இருக்கின்றது. எப்படியாவது ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ரஜினி.
இந்தப் படத்திற்கு பிறகு லால்சலாம் படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் இவரின் நடிப்பில் நீண்ட நாள்களுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படம் ‘படையப்பா’. இந்தப் படத்தில் ரஜினி, சிவாஜிகணேசன், ரம்யா கிருஷ்ணன் என பல முன்னனி நடிகர்கள் நடித்திருந்தனர். படத்தை கே.எஸ்.ரவிக்குமார்
இயக்கியிருந்தார்.
படத்தின் கதைப்படி க்ளைமாக்ஸில் ரஜினி சட்டையை கழட்டி சண்டை போடுவதுமான சீன். ஆனால் கனல்கண்ணன் ரஜினி சட்டையைக் கழட்டினால் நல்லாவே இருக்காது என்று கூறினாராம். இதை கே.எஸ். ரவிக்குமார் அப்படியே ரஜினியிடம் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : மாஸ் ஹிட் கொடுத்த அந்த படம் அஜித்துக்காக எழுதுனது இல்லையாம்! – சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்!..
அதற்கு ரஜினி அவருடைய ஸ்டைலில் ‘என்ன கனல் என்னால் முடியாதா? மூட்டை தூக்குன உடம்பு இது..’ என்று சொல்லி அனைவரையும் அசரவைத்து விட்டாராம் ரஜினி.