தமிழ் சினிமாவில் பல சமயம் இந்தமாதிரி நடந்துள்ளது. ஒரு ஹீரோ நடிக்க கமிட் ஆகி சில நாட்கள் நடிக்க கூட ஆரம்பித்து விடுவர். ஆனால், அதற்கடுத்து, எதோ சில காரணங்களால் அந்த படத்தில் ஹீரோ மாற்றம் நடந்துவிடும் .
ஆனால், சில படங்கள் அந்த ஹீரோவுக்கு என்றே எழுதி வைத்திருப்பர். அதில் மற்ற ஹீரோக்களை நடிக்க வைத்தாலும் அது செட் ஆகாது. ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படிதான் கமலுக்கு மருதநாயகம் உள்ளது. இன்றளவும் அந்த குழு வேறு ஹீரோவை தேடி போகவில்லை.
அதே போல ரஜினி எந்திரனுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் , பாகுபலிக்கு முன்னரே பிரமாண்ட திரைப்படமாக உருவாக இருந்தது ராணா. பின்னாளில் அந்த படத்தின் கதையை தான் கோச்சடையான் எனும் பெயரில் கிராபிக்ஸ் அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கினர்.
ரஜினிக்கு உடல் நிலை மோசமான காரணத்தால் அந்த படத்தை ஷூட்டிங் செய்து எடுக்க முடியவில்லை. அந்த சமயம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உடன் பணியாற்றிய நடிகர் சித்ரா லட்சுமணன் இப்படம் பற்றி கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – அர்ஜூனால் எனக்கு விஜய் படம் போச்சு.! புலம்பி தள்ளும் காமெடி நடிகர்.!
அதாவது, இந்த படத்தை ரஜினியால் தொடர முடியாது என்கிற நிலை வந்ததும், இயக்குனர் வேறு ஹீரோவை தேடி போலாமா என்கிற யோசனையில் இருந்தாராம். அப்போது இவர் விஜயிடம் இதனை கூறி பாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்ததாம். ஆனால், அது பேச்சளவிலேயே நின்று போனதாம். உண்மையில் அது ரஜினிக்கென்று எழுதப்பட்ட கதை திரைக்கதையில் வேறு யார் நடித்தாலும் செட் ஆகாது என்பதே உண்மை.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…