அண்ணாத்த-யில் பட்ட பாடு!...ஜெயிலரில் உஷார் ஆன ரஜினி...லீக் ஆன தகவல்....
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் ரஜினி தனது உடல் நலத்தில் மிகுந்த கவனம் எடுத்து வருகிறார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என ஆகியவற்றை விடாமல் கடைபிடித்து வருகிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்த போது, அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் நடித்து வந்தார். பல கட்டுப்பாடுகளை மீறியும் அந்த படப்பிடிப்பில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினியும் பாதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் யுடியூப் சேனல் இத்தனை கோடியா?!…மொத்த கடனையும் அடைச்சிடுவாரே!….
ஏனெனில், அப்படத்தில் அனைத்து காட்சியிலும் ஏராளமான நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் என பெரும் கூட்டமே இருக்கும். அதன்பின் பல நாட்கள் ஓய்வு எடுத்து பின் மீண்டும் அப்படத்தில் ஒருவழியாக அப்படத்தில் நடித்து முடித்தார். இன்னும் சொல்லப்போனால், உடல்நிலை காரணமாகவே அரசியலுக்கு வருவதில் இருந்தும் அவர் பின் வாங்கினார்.
இதையும் படிங்க: தூரமா இருந்தாலும் தூக்கலாத்தான் இருக்கு!… பீச் டிரெஸ்ஸில் விருந்து வைக்கும் ராய் லட்சுமி….
தற்போது அந்த நிலை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என கருதும் ரஜினி, ஜெயிலர் படத்தில் கூட்டம் அதிகமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். நெல்சன் கதைகளில் எப்போதும் அதிக கூட்டம் இருக்காது. ஆனாலும், இதை உறுதியாக நெல்சனிடம் கூறிவிட்டாராம் ரஜினி.
எனவே, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரஜினி என சிலரை மட்டுமே வைத்து பல காட்சிகளையும் எடுத்து வருகிறாராம் நெல்சன்..