More
Categories: latest news

அடுத்த தலைமுறைக்கு ரஜினி ஒரு காமெடி பீஸு.. இவ்ளோ தில்லா சொல்ற நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இதில் ரஜினிக்கு முன்னாடியே கமல் குழந்தை நட்சத்திரமாக இந்த சினிமாவில் பயணி த்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக கமல் என்ற திரைத்துறையில் பெரும் சாதனை படைத்த மனிதராக திகழ்ந்து வருகிறார். அதேபோல ரஜினியும் அவருடைய தனித்துவமான நடிப்பாலும் ஸ்டைலாலும் இன்றுவரை மக்களை உற்சாகத்தில் திகைத்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மற்றும் கமல் பற்றி அவர்களுடைய ஆரம்ப கால சக நடிகரான கவிதாலயா கிருஷ்ணன் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது கமலுக்கு எப்பொழுதுமே கர்வம் இருக்கும். ஆனால் அது இருக்க வேண்டும். என்ன நடிகர் அவர்? அவரை மாதிரி இந்த சினிமாவில் வேற எந்த நடிகர்களும் இருந்திருக்கிறார்களா? அதனால் கர்வம் இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

Advertising
Advertising

இதையும் படிங்க: கார் டயர் பஞ்சர்… பாரதிராஜாவுக்கு அடித்தது லக்… லேடி சூப்பர்ஸ்டாரே கிடைச்சுட்டாரே..!

ஆனால் அவரை இந்த தமிழ் சினிமா கொண்டாடவில்லை. அவர் ஓரு பொக்கிஷம்.அதைப்போல நாகேஷ், எம் எஸ் வி இவர்களையும் தமிழ் சினிமா கொண்டாடவில்லை .எம் எஸ் விக்கு பத்மஸ்ரீ விருது கூட கிடைக்கவில்லை. ஏன் சமீபத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷை  அடுத்த வருடம் மறந்து விடுவோம் .இவ்வளவு தான் சினிமா. ஏன் அடுத்த தலைமுறையே ரஜினியை மறந்து விடுவார்கள் என கவிதாலயா கிருஷ்ணன் கூறினார்.

இதற்கிடையில் நிருபர் ரஜினிக்கு அடுத்த வருடம் விழா எடுக்கணும்னு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது  ‘விழா எடுக்கட்டும் சார் .150 கோடிக்கு மேல சம்பளமாக பெறுகிறார். அதனால விழா எடுப்பாங்க .ஒரு பொலிட்டிக்கல் பார்ட்டி விழா எடுப்பாங்க. தனியார் நிறுவனம் விழா எடுப்பாங்க.

krishna

ஆனால் ரசிகர்களை எடுக்க சொல்லுங்க. மாட்டாங்க. ஏன் நானே எடுக்க மாட்டேன். அடுத்த தலைமுறைகளுக்கு ரஜினி ஒரு காமெடி பீஸ். இந்த மாதிரி போன பேட்டியில் கூறும்போது ரஜினி ரசிகர்கள் என்னை அடிக்க வந்து விட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை.  ஏனெனில் ரஜினியின் லிமிடேஷன் என்ன என்பது அவருக்கே தெரியும்.

இதையும் படிங்க: தனுஷ், சிம்பு, விஷாலுக்கு மீண்டும் வச்ச ஆப்பு?!.. எங்க போய் முடியப்போகுதோ!…

கமல் மாதிரி அழகன் கிடையாது .வாய்ஸ் கிடையாது. தமிழ் தெரியாது. இதுதான் அவருடைய லிமிடேஷன். இது அவருக்கே நன்றாக தெரியும். சிவாஜியின் உச்சரிப்பு கிடையாது. சிவாஜியின் ஸ்டைலை பின்பற்றினார். கமலைப் பொறுத்த வரைக்கும் மகாநதி வரைக்கும் ஒரு நடிப்பு .மகாநதிக்கு பிறகு வேறொரு பரிணாமத்தை கொடுத்தார்.

ஆனால் ரஜினியை கையை அசைக்காமல் நடிக்க சொல்லுங்கள். பார்ப்போம். ஏன் விவேகானந்தர் மாதிரி நடிக்க சொல்லுங்கள். கண்டிப்பாக முடியாது. அவருடைய கேரியரில் பாட்ஷா படத்தை சொல்லலாம், அபூர்வ ராகங்கள் படத்தை சொல்லலாம். அவ்வளவுதான்.  வீரபாண்டிய கட்டபொம்மன், படிக்காத மேதை போன்ற படங்களை மாதிரி ஏதாவது படங்களில் நடித்திருக்கிறாரா இல்லை’ என கவிதாலயா கிருஷ்ணன் கூறியிருக்கிறார்

Published by
Rohini