என் படம் விக்ரம் வசூலை தாண்டனும்!.. கறாராக கண்டிஷன் போட்ட ரஜினி!..

Published on: June 20, 2023
rajini kamal
---Advertisement---

தமிழ் சினிமாவின் இரு துருவ நடிகர்களான ரஜினி – கமல் இடையே மிகப்பெரிய போட்டிகள் நிலவி வந்தது. கமலுக்கு மிகப்பெரிய நட்சத்திர பின்னணி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அவரால் ரஜினி என்ற நடிகரை வெல்ல முடியவில்லை. அது பெரும் சவாலான போட்டியாகவே அவர் பார்த்தார்.

இது குறித்து நிறைய பேட்டிகளில் கூட கமல் ” ரஜினி எனக்கு ஒரு பலமான போட்டி என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். சினிமாவில் நடந்துக்கொண்டிருந்த நான் ரஜினியால் எழுந்து ஓடவேண்டியதாயிற்று எனக்கு அவ்வளவு கடும் போட்டியை கொடுத்தார் ரஜினி என கூறியிருக்கிறார். ரஜினிக்கு சினிமாவில் போட்டிக்போட்டு சந்திக்கவேண்டும் என எண்ணம் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் அப்படி நினைத்ததை பல மேடைகளில் கமல் குறித்தும், அவரது நடிப்பு குறித்தும் பெருமையாக பேசியிருக்கிறார்.

அவர்களை தாண்டி அடுத்த தலைமுறையாக விஜய் – அஜித் போட்டியே வந்துவிட்டது. ஆனாலும், இன்னும் ரஜினி – கமல் போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆம், விக்ரம் படம் வெளியானபோது அதை பார்த்துவிட்டு ரஜினி இதை பீட் செய்யுற மாதிரி ஒரு படம் பண்ணனும் என ஆசைபட்டாராம். அது தான் தற்போது ஜெயிலர். இப்படத்திற்காக ரஜினி பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.