ரஜினியின் கடைசி படம் இதுதானா?.. பெரிய அளவில் உருவாக்க ரஜினி போடும் பக்கா மாஸ்டர் ப்ளான்!..
தமிழ் சினிமாவில் ரஜினி என்று சொன்னாலே போதும் அவருடைய வரலாற்றை அறிந்து விடலாம். அந்த அளவில் மக்கள் மத்தியில் பரீட்சையமாகியிருக்கிறார். சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி அவர் நடிக்க வந்த புதிதில் இருந்தே தன்னுடைய ஸ்டைலாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த துடிப்பான ஆட்டத்தை இன்றளவு வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி தனது அடுத்தப்படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறாராம். அதுவும் அந்த படம் தான் தனது கடைசி படமாகவும் இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறாராம்.
அதனாலேயே தனது கடைசி படம் நல்ல தரமாக அமையவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம். அந்த வகையில் ஒரு வெயிட்டான இயக்குனரை தேடிக் கொண்டிருக்கும் ரஜினி லோகேஷை அணுகியிருக்கிறாராம். லோகேஷ் ஏற்கெனவே லியோ படத்திற்கு பிறகு கைதி - 2 படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த போகிறார் என்ற தகவல் வெளியானது.
ஆனால் லோகேஷ் காஷ்மீர் செல்வதற்கு முன்பே ரஜினியுடன் ஒரு மீட்டிங் நடத்திவிட்டு தான் போயிருக்கிறாராம். அப்போது ரஜினி லோகேஷிடம் நீங்கள் , நான் இணையும் இந்தப் படம் என்னுடைய கடைசி படமாக இருக்கும். அதனாலேயே ஒரு நல்ல கதைய உருவாக்கி ஹிட் கொடுக்க வேண்டும் என்று கூறினாராம் ரஜினி.
ஆனால் லோகேஷ் கைதி -2 அதன்பின் விக்ரம் -2 என வரிசையாக படம் இருக்கிறது என்று சொல்ல கமலிடம் நான் பேசிக் கொள்கிறேன், இந்த ப்ராஜெக்டை பற்றி கூறினால் கமல் கண்டிப்பாக ஒத்துப்பார் என்று சொல்லியிருக்கிறாராம். ஒரு வகையில் கமலை ரஜினி சரிசெய்து விடுவார்.
இந்த பக்கம் கைதியின் தயாரிப்பாளரான எச்.ஆர். பிரபுவிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது என்ற குழப்பதிலேயே காஷ்மீர் சென்றிருக்கிறாராம் லோகேஷ்.இதனிடையில் இந்த விஷயத்தை பற்றி அறிந்து எச்.ஆர்.பிரபு எப்படியாவது லியோ படத்திற்கு பிறகு கண்டிப்பாக கைதி -2 வை எடுத்தாக வேண்டும் என்ற முயற்சியில் இருக்க கூடவே ஜூன் மாதத்தில் இருந்தே கார்த்தியின் கால்ஷீட்டை வாங்கி வைத்துக் கொண்டு ரெடியாக இருக்கிறாராம். என்ன செய்யப் போகிறாரோ லோகி ? இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.
இதையும் படிங்க : அட்வான்ஸ் கொடுக்க கூட பணம் இல்ல!.. படமோ சூப்பர் ஹிட்!… இது எப்படி சாத்தியம்?..