தமிழகத்தை ஆன்மீகப் பூமியாக மாற்றியவர் ரஜினி?.. விட்டல் தாஸ் கருத்துக்கு ஆவேசப்பதிலடி கொடுத்த பத்திரிக்கையாளர்
சமீபத்தில் சென்னையில் ஒரு ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. ஆன்மீகத்தில் மிகவும் பிரபலமான விட்டல்தாஸ் ஜெய் கிருஷ்ணா குருக்கள் அந்த ஆன்மீக சொற்பொழிவை ஆற்றினார். அந்த சொற்பொழிவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் விட்டல்தாஸ் சுவாமிகள் ரஜினிக்கு பொன்னாடை அணிவித்து அவரைப் பற்றி மிகவும் பெருமையாகவும் பேசினார்.
அதாவது தமிழகம் கடந்த 50 ஆண்டு காலமாக நாத்திகத்தில் மூழ்கிக் கிடந்தது .ஆத்திகத்தில் இருந்த தமிழகம் நாத்திகத்தில் இருந்தது. ஆனால் அதை கடந்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் ஆன்மீக பூமியாக மாற்றியவர் ரஜினிகாந்த் என்று மிகவும் பெருமையாக பேசினார். அதாவது ரஜினி சினிமா மூலம் ஆன்மீகத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார் என்ற கருத்தை அவர் சொல்ல வருவதாக தெரிந்தது.
ஆனால் ரஜினி ஆன்மீகம் சம்பந்தமான கருத்துக்களை ராகவேந்திரா, பாபா ,அருணாச்சலம் ஆகிய மூன்று படங்களில் மட்டுமே காண்பித்திருக்கிறார் ஒழிய மற்ற படங்கள் எல்லாம் ஆக்ஷன் கலந்த படங்களாகவே அமைந்தன. அதனால் விட்டால் தாஸின் இந்த கருத்தை மிகவும் எதிர்க்கும் வண்ணம் பேசி இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளரான வலை பேச்சு அந்தணன். அதாவது பெரியார் சொன்ன கருத்துக்களையும் அவர் கொண்டு வந்த பகுத்தறிவையும் ஒரு சாதாரண நடிகனாக இருக்கும் ரஜினி மாற்றிவிட முடியுமா என்று மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார் அந்தணன்.
அதுமட்டுமில்லாமல் அந்த குருக்கள் ரஜினி ருத்ராட்சம் போட்ட பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் ருத்ராட்சம் போடத் தொடங்கி விட்டனர் என கூறியிருக்கிறார். அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த அந்தணன் ரஜினி போட்ட பிறகுதான் அனைத்து இளைஞர்களும் ருத்ராட்சம் போட்டனர் என்று அவர் பேசியுள்ளார் .அப்படி இருந்திருந்தால் ரஜினிக்கு மக்கள் தொடர்பாளராக இருக்கும் ஒரு இஸ்லாமியர் ரியாஸ் .அவரும் ருத்ராட்சம் போட்டு இருக்க வேண்டும் அல்லவா? அதனால் அவருடைய இந்த கருத்து ஏற்புடையதாக இல்லை. அவரவர் மதம் அவரவர் ஆன்மீகம் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் கூறிய அந்தணன் ரஜினி அந்த அளவுக்கு ஆன்மீகத்தை தன் படங்களின் மூலம் காட்டினாரா என்றால் இல்லை. மூன்று படங்களில் மட்டுமே ஆன்மீகத்தை காட்டியிருக்கிறார் தவிர மற்ற படங்கள் எல்லாம் ஆன்மிகம் தொடர்பான படங்களாகவே அமையவில்லை என்றும் கூறினார்.
அந்த காலத்தில் நாத்திகத்தை படங்களின் மூலம் விதைத்தவர்கள் கலைஞர், அண்ணா ஒரு பக்கம் எம் ஆர் ராதா. எம் ஆர் ராதாவின் பல படங்கள் சாமி கும்பிடுகிறவர்களை வெறுப்பதாகவே அவருடைய வசனங்கள் அமைந்திருக்கும். ஆனால் அந்த படங்களை எல்லாம் பார்த்தும் மாலையில் வீட்டில் போய் சாமி கும்பிட்ட ரசிகர்கள் ஏராளம் பேர். மேலும் பக்தியை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் ஆதி காலத்தில் இருந்து வந்து கொண்டே தான் இருந்தன. அந்த சமயத்தில் அண்ணா, கலைஞர், எம் ஆர் ராதா இவர்கள் கோலோச்சி இருந்த காலம். அவர்கள் நாத்திகத்தை பெருமளவு பேசிக் கொண்டே இருந்தாலும் இந்த ஆன்மீக படங்களை எல்லாம் ரசிகர்கள் ஓட அப்பவும் வைத்திருக்கிறார்களே?
ஆனால் இந்த குருக்கள் என்னமோ ரஜினியின் படங்கள் தான் பக்தியை அதிகரித்து விட்டிருக்கின்றன என்று கூறுவது ஏற்புடையதாகவே இல்லை என்று அந்தணன் மிகவும் காரசாரமாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : காத்துவாக்குல ‘தளபதி – 68 ’கதையை பறக்கவிட்ட வெங்கட் பிரபு! – ஆர்வக்கோளாறு இருக்கலாம்.. அதுக்கு இப்படியா?