ரஜினி அரசியலுக்கு வராததற்கு காரணம் இதுதானா..? சரியான ஆளுதான்யா நம்ம தலைவரு...

by Rohini |
ra_main_cine
X

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என புகழப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தான் நடித்த பைரவி படத்தின் மூலம் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். நடிப்பு மட்டுமில்லாமல் பாடவும் செய்வார் ரஜினி. அடிக்குது குளிரு என்ற இவர் நடித்த படத்தில் இந்த பாடலை பாடியது ரஜினிதான்.

ra1_cine

இவர் பெரும்பாலும் அதிகமாக பேசமாட்டார். பேசவும் தெரியாது என சில சமயங்களில் இவரே கூறியுள்ளார். அதிகம் பேசாததற்கு காரணம் ஒரு நடிகன் அதிகமாக நன்றாக பேசினால் அவன் அரசியலுக்கு வருவான் என்ற கருத்து இருந்ததாக அவர் கூறினார். மேலும் அரசியலுக்கு வருவதற்கு போதிய அறிவு தேவையில்லை. அனுபவம் தேவையில்லை. நன்றாக பேசத்தெரிந்தால் போதும் எனவும் கூறினார். அதனால் தான் நான் பேசமாட்டேன் என கூறினார்.

ra2_cine

போகும் இடங்களில் எல்லாம் எனக்கு பேசத்தெரியாது என்று கூறினால் நல்லா இருக்காது எனக் கருதி ஓரளவுக்கு பேச ஆரம்பித்தேன். அதிலிருந்து பத்திரிக்கையில் ரஜினி அரசியலுக்கு வருவார் வருகிறார் என செய்திகள் வர தொடங்கி விட்டது.

ra3_cine

அன்றிலிருந்து பேச்சையே குறைத்துக் கொண்டேன் என கூறினார். ஆகவே இதிலிருந்து இவர் பேச்சை நிறுத்தியதால் தான் அரசியலுக்கு வரவில்லை என தெரிகிறது. இதை ஒரு மேடையில் ரஜினியே கூறினார். ஆனாலும் ரசிகர்கள் இவர் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என காத்துக் கொண்டிருக்கின்றனர். காலம் தான் பதில் சொல்லும்.

Next Story