Connect with us
rajini_main_cine

Cinema History

ரஜினி எல்லாம் பெரிய ஹீரோவா?.. அவங்க தான் ஹீரோ!.. பளிச்சுனு வெளிப்படையா சொன்ன திருப்பூர் சுப்பிரமணியன்!..

70, 80களில் இருந்தே தன்னுடைய தனித்திறமையாலும் ஸ்டைலாலும் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த். இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கருப்பு வைரம் தான் ரஜினிகாந்த்.

அறிமுகம்

அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழி சினிமாவில் முதன்  முதலில் காலெடி எடுத்து வைக்கிறார். தமிழே தெரியாமல் வந்த ரஜினிகாந்த் இன்று தமிழக மக்கள் மனதில் அச்சாணி போல் பதிந்து காணப்படுகிறார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த ரஜினி பைரவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

rajini1_cine

ரஜினி

அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய பெருமை கதாசிரியரும் இயக்குனருமான கலைஞானத்தையே சேரும். ஆரம்பத்தில் கமலுடன் தான் சேர்ந்து நடித்து வந்தார் ரஜினி.கிட்டத்தட்ட 13 படங்களுக்கு மேல் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.

கமல் ரஜினி முடிவு

அதன் பிறகு தனித்தனியாக பிரிந்து நடித்து இருவரும் தங்களின் முத்திரையை பதிக்க ஆரம்பித்தனர். பிரிந்த பிறகு தான் ரஜினியின் மாஸ் என்னவென்று ரசிகர்கள் உணர ஆரம்பித்தனர். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக ரஜினி தான் திகழ்ந்து வருகிறார்.

rajini3_cine

ரஜினி பாபா

இதையும் படிங்க : உண்மையான வீச்சருவா.. விஜயகாந்தின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பிரபல நடிகர்!.. படப்பிடிப்பில் நடந்த பத பதைக்கும் சம்பவம்!..

ஆனால் இப்படி பட்ட ரஜினி ஒரு பெரிய ஹீரோவே இல்லை என்று திரைப்பட உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த ரஜினிக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்த படமாக பாபா படம் அமைந்தது.

கதை தான் பேசும்

அப்போது ரசிகர்களில் இருந்து ஏராளமான கலைஞர்கள் அவரை தூற்றினார்கள். அப்போது ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி தன் சொந்த பணத்தை போட்டு ஈடுகட்டினார். அதே ரஜினி அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தார் சந்திரமுகி படத்தின் மூலம்.

rajini4_cine

ரஜினி

இதையும் படிங்க : வசூல் ரீதியாக கமலின் தோல்வி படம் என்ன தெரியுமா?!! என்ன தல!! பாட்டெல்லாம் கொண்டாடுனீங்க…

அப்பொழுது ரசிகர்கள் எல்லாரும் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். ஆனால் இரண்டிலும் அதே ரஜினி தான். அதனால் இந்த வித்தியாசத்தில் என்ன தெரிகிறது என்றால் உண்மையான ஹீரோ பெரிய ஹீரோ என்று ரஜினியை சொல்ல முடியாது. கதையை தான் சொல்ல முடியும்.

ரஜினி மட்டும் இல்லை, கமல், விஜய், அஜித் என முன்னனி நடிகர்கள் தான் தேர்ந்தெடுக்கும் கதையை சரிவர தேர்ந்தெடுத்து நடித்தாலே போதும் ஜெயித்து விடுவார்கள் என்று திருப்பூர் சுப்பிரமணி கூறினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top