நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்கு கெட்டவன் - ரஜினி வில்லனாக கலக்கிய திரைப்படங்கள்..

by Rohini |   ( Updated:2023-12-13 20:46:03  )
rajini
X

rajini

Superstar Rajini: சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமாவிலேயே பேசப்படும் நடிகர் என்றால் அது ரஜினிதான். வெவ்வேறு மொழி சினிமாக்களில் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் இருக்கிறார்கள். ஆனாலும் ரஜினிக்கு இருக்கிற அந்த வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடையாது.

உலகளவில் பேசப்படும் நடிகராகவும் இருக்கிறார். ஆரம்பகாலங்களில் வில்லனாக தன் நடிப்பை ஆரம்பித்த ரஜினி பைரவி என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். இருந்தாலும் அவர் வில்லனாக நடித்து மிரட்டிய படங்கள் பல இருந்தாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா வில்லனாக ரஜினி நடித்த திரைப்படங்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படிங்க: என்னங்கடா எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க.. கோபி நிலைமை தான் அந்தோ பரிதாபமா..?

16 வயதினிலே: பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்ற திரைப்படம் தான் 16 வயதினிலே. அதில் பரட்டையனாக ரஜினியின் கதாபாத்திரம் நின்று பேசக் கூடியதாக அமைந்தது. கொடூரமான பார்வை, வீரவசனம் என படம் பார்க்க வந்த மக்களையே மிரட்டியிருப்பார் ரஜினி. பரட்டை என்ற கதாபாத்திரத்தை மட்டும் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.

175 நாள்களுக்கு மேல் இந்தப் படம் திரையரங்குகளில் ஓடி ஏகப்பட்ட விருதுகளை தட்டிச் சென்றது. ரஜினி மட்டுமில்லாமல் கமலும் இந்தப் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இதையும் படிங்க: மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..

நெற்றிக்கண்: எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சரிதா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் நெற்றிக்கண். இந்தப் படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அப்பா ரஜினிக்கு ஜோடியாக லட்சுமி நடித்திருப்பார். மகன் ரஜினிக்கு சரிதா ஜோடியாக நடித்திருப்பார். கொடூர மாமனாராகவும் பெண்களை அடிமைப்படுத்துவது போன்ற கதாபாத்திரத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக நடித்து யாரும் மறக்க முடியாத வகையில் இந்தப் படத்தில் நடித்திருப்பார் ரஜினி.

எந்திரன் : நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன் வில்லத்தனத்தை வெளிப்படுத்திய படமாக எந்திரன் திரைப்படம் அமைந்தது. சங்கர் இயக்கத்தில் ரஜினி , ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம்தான் எந்திரன். இதில் சிட்டியாக நடித்திருக்கும் ரோபோ ரஜினிதான் சைண்டிஸ்ட் ரஜினிக்கு ஒரு கட்டத்தில் வில்லனாக மாறியிருப்பார். அந்த ஒரு ட்விஸ்ட்தான் திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் திரில்லிங்காக இருந்தது. இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து அதுவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: மிஸ் ஆன ‘23ஆம் புலிகேசி’ பட வாய்ப்பு! வடிவேலுக்கு முன் நடிக்க இருந்த நடிகர் இவர்தான் – ஐய்யோ விட்டுடீங்களே

இப்படி தன் வாழ்க்கையில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்து இன்று வரை ஒரு அற்புத கலைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினி.

Next Story