Categories: Cinema History Cinema News latest news

கேன்சரால் சினிமாவை விட்டு சென்ற நடிகை – ஒருவகையில் ரஜினியும் காரணமாம்..!

ரஜினி நடிப்பில் தயாராகி வரும் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட அதன் இறுதிக்கட்ட பணிகளை நெருங்கிவிட்டது. படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முழுவதுமாக முடிந்துவிட்டன. அடுத்ததாக எடிட்டிங், டப்பிங் வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன.

சினிமாவில் தொடர்ந்து கதாநாயகர்களில் முதல் இடத்தை பிடித்து, அதை பல வருடங்களாக தக்க வைத்தும் வருகிறார் ரஜினிகாந்த். அவரது தனிப்பட்ட ஸ்டைல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கிறார். ஆனால் கதாநாயகிகளை பொறுத்தவரை ரஜினி படத்தில் கதாநாயகியாக நடித்தால் அவர்களுக்கு மார்க்கெட் போய்விடும் என்ற பேச்சு இருந்தது.

ஆனால் அதையும் உடைத்துவிட்டார் நடிகை நயன்தாரா. ரஜினிகாந்த் குறித்து இப்படி ஒரு பேச்சு வர காரணமாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. மனுஷா கொய்ராலா ஹிந்தியில் பிரபலமாக இருந்த நடிகை ஆவார்.

வாய்ப்பை இழந்த நடிகை:

தமிழில்  பம்பாய், இந்தியன், முதல்வன் மாதிரியான படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் கூறும்போது பாபா படத்திற்கு பிறகு சுத்தமாக சினிமாவில் வாய்ப்பை இழந்துவிட்டேன். என் சினிமா வாழ்க்கையையே பாபா படம் மாற்றிவிட்டது என கூறியிருந்தார்.

உண்மையில் சினிமாவில் உச்சத்தை தொட்டப்பிறகு மனுஷா கொய்ராலா அதிகமாக மதுவிற்கு அடிமையானார். இதனால் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது போன்ற பல அவமதிப்பு விஷயங்களை செய்தார். எனவே அவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கின. அதன் பிறகு அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்ததால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாமல் போனது.

இவையே அவர் சினிமாவில் வாய்ப்புகளை இழந்ததற்கு காரணம் என கூறப்படுகின்றன.

இதையும் படிங்க: வெட்கமா இருக்கு… நன்றியை மறந்தாரா?… அஜித் செயலால் கடுப்பான ரசிகர்கள்..

Published by
Rajkumar