அண்ணாத்தவுக்கு ஆப்பு வைத்த மழை...அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ்...அப்செட்டில் ரஜினி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 4ம் தேதி வெளியான திரைப்படம் அண்ணாத்த. எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வந்தது. வெளியான அனைத்து தியேட்டர்களிலும் குடும்பம் குடும்பமாக சென்று இப்படத்தை பார்த்து வந்தனர்.
ஆனால், இப்படத்தின் வசூலுக்கு எதிராக மழை வந்தது. கடந்த சனிக்கிழமை முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், கன்னியாகுமாரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவாட்டங்கள் கனமழை பெய்து வருகிறது. அதிலும், தியேட்டர்களில் அதிக வசூலை குவிக்கும் மாவட்டமான சென்னையில் 5 நாட்களுக்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. எனவே, சென்னையின் பல பகுதிகள் மழை நீரில் தேங்கியுள்ளன.
எனவே, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மக்கள் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. எனவே, கடந்த சனிக்கிழமை முதலே அண்ணாத்த படத்தின் வசூல் கடுமையாக பாதித்துள்ளது. பல ஊர்களில் காட்சியையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. எனவே, வசூல் பற்றி இப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ், தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் போட்ட கணக்கு தவறிவிட்டது.
இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம். மேலும், ரஜினியும் அப்செட் ஆகிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
ரஜினியின் கடைசி 2 படங்களான பேட்ட மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. சனிக்கிழமைக்கு முன்பு வரை அண்ணாத்த படம் அத்தனை கோடி வசூல், இத்தனை கோடி வசூல் என செய்தி வெளியாகி வந்த நிலையில், கடந்த 5 நாட்களாக அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.