வாரிசு படம் கற்றுக்கொடுத்த பாடம்...! புது டெக்னிக்கை பயன்படுத்திய ஜெய்லர் படக்குழு...!
நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் ஐதராபாத் என இரு இடங்களில் நடைபெற்று வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளின் ஒரு சில சீன்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது லீக் ஆகி ஒட்டு மொத்த படக்குழுவையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சம்பவங்களால் பிரபலங்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. வாரிசு படப்பிடிப்பில் நடைபெறும் இந்த மாதிரியான செயல்களினால் ஜெய்லர் படக்குழு கொஞ்சம் உஷாராக இருக்கின்றது.
இதையும் படிங்கள் : தனுஷ் செய்த வேலையில்தான் பாரதிராஜாவுக்கு இந்த நிலைமையா?!..இது என்னடா புதுக்கதை…..
ஜெய்லர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் தங்களுடைய போனில் உள்ள கேமராவை ஒரு ஸ்டிக்கர் போட்டு மறைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனராம். படப்பிடிப்பிற்குள் வரும் போது கேமராவை ஸ்டிக்கர் போட்டு தான் ஒட்டி வரவேண்டுமாம்.
இதையும் படிங்கள் : தலைவர் ரஜினி இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டார்… இனி டான் ஆட்டம் தான்.! விரைவில் 170…
ஏனெனில் பெரிய நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் எந்த படமும் இந்த சிறிய பிரச்சினைகளுக்கு உள்ளாவது சம்பந்தப்பட்ட ஒட்டு மொத்த படக்குழுவையும் பாதிக்கும் எனக் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.