ஹிட் பட இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி.. இது செம காம்போ!....

நடிகர் ரஜினிக்கு கடந்த சில வருடங்களாகவே போதாத காலம் போல… சந்திரமுகி திரைப்படத்திற்கு பின் பெரிய வெற்றிப்படத்தை ரஜினி இதுவரை கொடுக்கவில்லை. அவர் நடித்து வெளியான லிங்கா, குசேலன், காலா, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரும் வெற்றிப்படங்களாக அமையவில்லை. இடையில் பேட்ட படம் மட்டும் கொஞ்சம் தப்பித்தது. ஆனால், அஜித்தின் விஸ்வாசம் படம் அந்த வசூலையும் அடித்து நொறுக்கிவிட்டது.

rajini

எனவேதான், அந்த பட இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நடிக்க விரும்பினார் ரஜினி. அப்படி உருவான திரைப்படம்தான் அண்ணாத்த. ஆனால், இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஓவர் செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் அபத்தமான வசனங்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டது. மேலும், மழை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு வசூலும் பாதித்தது. இதனால், இந்த படம் எப்படியும் வெற்றி பெறும் எனும் காத்திருந்த ரஜினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோலில் கலக்கிய படங்கள்

rajini-siva

எனவே, தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். ஆனால், அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒருபக்கம், சன் பிக்சர்ஸ் நிறுனம் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

nelson

இந்நிலையில், இந்த தகவல் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினி தனது 169 படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. மேலும், இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துவங்கும் எனவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து #Thalaivar169 என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

Related Articles

Next Story