ரஜினியும் கமலும் மீண்டும் சேர்ந்து நடிக்கிறாங்க! என்ன விஷயம் தெரியுமா?
Rajini Kamal: ரஜினியும் கமலும் மீண்டும் சேர்ந்து நடிக்கப் போவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். மிகப்பெரிய ஆளுமைகளாக இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக இந்த சினிமாவில் நடித்து வரும் இருவரும் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட நடிகர்களாக இருந்து வருகிறார்கள். எம்ஜிஆர் சிவாஜி இவர்களுக்கு அடுத்தபடியாக அனைவரும் மதிக்கத்தக்க நடிகர்களாக ரஜினியும் கமலும் தான் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஏன்மா உன் வாய் சும்மா இருந்து இருக்கலாமே? கோட் தங்கச்சியால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு
இருவரும் சேர்ந்து ஆரம்ப காலங்களில் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அதில் ரஜினி பெரும்பாலும் வில்லனாகவும் கமல் ஹீரோவாகவும் தான் நடித்திருக்கிறார். அதன் பிறகு இருவருக்கும் ஒரு மார்க்கெட் உயர இனிமேல் சேர்ந்து நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து தனித்தனியாக பயணிக்க ஆரம்பித்தனர்.
அதைப்போல இன்று இருவருக்குமே தமிழ் சினிமாவில் பெரிய அளவில் மார்க்கெட் இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இருவரும் சேர்ந்து எப்பொழுது நடிப்பார்கள் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. அது வெகு விரைவில் நடக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: எம்ஜிஆர், விஜயகாந்த் செய்யாததை விஜய் செஞ்சிருக்காரு.. ‘கோட்’ படத்தால் புகழ் மேல் புகழ்
அதாவது நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நடந்து கொண்டு வருகின்றன. நடிகர் சங்கத்தின் கடனை தீர்க்க விஜய்காந்த் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் கடனை தீர்த்தார். அதைப்போல இவர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்களாம் .
அதில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பதாக உறுதி அளித்து இருக்கிறார்கள். அதனால் நடிகர் சங்க கட்டிடம் எந்தவித தடையும் இன்றி கட்டி முடிக்கப்பட வேண்டும் என அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் என நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டிலேயே அலப்பறையா? ரஜினிகாந்த் வில்லனை கட்டம் கட்டி தூக்கிய போலீசார்