ஹிட் பட இயக்குனர்களை காக்க வைத்து காலி பண்ணும் ரஜினி, கமல்!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!..
தமிழ் திரையுலகில் ஒரு இயக்குனராக வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு இயக்குனரிடம் போராடி உதவி இயக்குனராக சேர்ந்து சில படங்கள் வேலை செய்து, பின் ஒரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பின்னால் நடையாய் நடந்து ஒரு படம் இயக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். பல வருடங்கள் அழைந்தும் படம் இயக்க வாய்ப்பே கிடைக்காமல் இருப்பவர்கள் பல பேர்.
அப்படி போராடி ஒரு படம் கிடைத்தாலும் அது ஹிட் படமாக அமையவேண்டும். அப்ப்போதுதான் அந்த இயக்குனருக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைக்கும். எனவே, ஆனால், சினிமாவில் பல வருடங்கள் நடிகர்கள் ஒரு விஷயத்தை செய்து வருகிறார்கள். ஒரு இளம் இயக்குனர் முதல் படமே ஹிட் படமாக கொடுத்துவிட்டால் பெரிய ஹீரோக்கள் அவரை அழைத்து ‘எனக்கும் ஒரு கதையை உருவாக்குங்கள்.. நான் நடிக்கிறேன்’ என சொல்வார்கள்.
இதையும் படிங்க: 600 கோடியெல்லாம் இல்லை!.. அதுக்குமேல வேட்டையாட ரெடியான வேட்டையன்!.. ரஜினி எப்படி இருக்காரு பாருங்க!
‘அடடா பெரிய ஹீரோவை இயக்கப்போகிறோம்’ என்கிற மகிழ்ச்சியில் அவர்களும் கதையை உருவாக்குவார்கள். ஆனால், வருடக்கணக்கில் காத்திருக்க வைத்து அதன்பின் ஏதோ இரு காரணம் சொல்லி ‘அப்புறம் பாப்போம்’ என சொல்லி அனுப்பிவிடுவார்கள். இதை ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், தனுஷ் என எல்லோருமே செய்து வருகிறார்கள்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ‘டான்’ பட இயக்குனர் சக்ரவர்த்தி ஆகியோரை ரஜினி இப்படித்தான் செய்தார். இதனால் சில வருடங்கள் அவர்களுக்கு வீணாகிப்போனது. அதன்பின் தேசிங்கு பெரியசாமி கமலிடம் போய் கதையை சொல்லி சிம்புவை வைத்து படமெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அவரின் முதல் படம் வெளியாகி 3 வருடம் ஆகிவிட்டது. அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவே இல்லை.
இதையும் படிங்க: முடிஞ்சா புடிச்சு பாரு!.. சிவகார்த்திகேயனுக்கு சவால் விடும் தனுஷ்.. கேப்டன் மில்லர் vs அயலான் வசூல்!
இதில் ரஜினிக்கு அண்ணன் கமல்ஹாசன். ஹெச்.வினோத்தை அழைத்து ‘நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என்றார். மகிழ்ச்சியுடன் போனார் வினோத். அவரின் துணிவு படம் வெளியாகி சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் கமல் பட வேலைகள் துவங்கவே இல்லை. இந்தியன் 2, இந்தியன் 3, மணிரத்னம், அன்பறிவு, தெலுங்கு படம் என தொடர்ந்து படங்களை கமிட் செய்து வருகிறார் கமல்ஹாசன். என்ன செய்வது என முழித்து வருகிறர் ஹெச்.வினோத்.
அதேபோல்தான் ராட்சசன் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ராம்குமார் தனுஷை நம்பி பல வருடங்கள் காத்திருந்தார். இப்போது வேறு நடிகரை வைத்து படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி சூர்யா, கார்த்தி, விஷால் என பல கதைகள் இருக்கிறது. ஒரு இயக்குனர் நடிகர்களை நம்பி போகாமல் தன் கதையை மட்டுமே நம்பி போவதுதான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பார்க்கவே நல்லா இருகேப்பா!.. லுங்கியில் மாஸ் காட்டும் பிரபாஸ்.. அடுத்த பட டைட்டில் இதுதான்!