
Cinema News
ரஜினி சொல்லும் ஒரே அட்வைஸ்… கமல் சத்தியமா அதை கேட்க மாட்டார்.! அது என்ன தெரியுமா.?!
தமிழகத்தில் இன்னும் கிட்டத்தட்ட 40 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இரு துருவ போட்டி நடிகர்கள் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி – உலகநாயகன் கமல்ஹாசன் தான். அவர்களுக்குள் நட்பு பாராட்டி வந்தாலும், சினிமாவில் போட்டி என்று வந்துவிட்டால் போட்டி தான்.
இருவரும் வளர்ந்து வந்த காலத்திலேயே தங்களது பாதை இதுவென தனித்தனியே தேர்ந்தெடுத்து அந்தந்த பாதைகளில் பயணிக்க தொடங்கிவிட்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினி தேர்ந்தெடுத்தது மக்களை மகிழ்விக்கும் பக்கா கமர்சியல் பாதை.
கமல்ஹாசன் தேர்ந்தெடுத்தது புது புது முயற்சிகளை சினிமாவில் கொண்டு வந்து தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும் முயற்சி. சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போட வேண்டும். அது லாபம் நஷ்டம் என்பதை தாண்டிய மன திருப்தி.
இதையும் படியுங்களேன் – ஒரு போட்டோவால் வந்த வினை.. வெங்கட்பிரபு செய்ததால் கடுப்பான அஜித்.!
ரஜினியிடம் யார் போய் பேசினாலும், அவர் பேசி முடித்து இறுதியில் சொல்லும் ஒரே அட்வைஸ், தயவு செஞ்சு அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் என்று படம் தயாரிக்க வந்து விடாதீர்கள். என்பது தான். இந்த கருத்திலும் இவர்களும் வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். இந்த அட்வைஸை கமலிடம் ரஜினி கூறினாலும் அவர் ஏற்றுக்கொள்வது மிக மிக கடினம் என்றே சினிமா வட்டாரம் கூறுகிறது.