ரஜினி, கமல்-லாம் என்ன நடிகர்..? அவர்களுக்கும் மிஞ்சிய ஒருத்தர் இருக்காரு...! கம்பீர நடிகரை பற்றி பேசிய இயக்குனர்...!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என அடைமொழியால் பெருமையாக பேசப்படுபவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல். சினிமாவை பொறுத்தவரைக்கும் பெரிய ஜாம்பவான்களாக வலம் வருகிறார்கள். 80களில் ஆரம்பித்த இவர்களது பயணம் இன்னும் வெற்றி பயணமாகவே தொடர்ந்து கொண்டு வருகிறது.
இவர்களின் காலத்தில் விஜயகாந்த், முரளி, சரத்குமார் போன்ற பிரபல நடிகர்கள் வந்தாலும் இவர்களை போன்ற இடத்தை பெற இயலவில்லை. இந்த நிலையில் இயக்குனரும் நடிகை தேவையானின் கணவருமான ராஜ்குமாரன் நடிகர் சரத்குமாரை பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் கூறினார்.
அவர் கூறும் போது சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிகர்களில் சரத்குமாரை போன்று இன்று வரை யாராலும் நடிக்க முடியாது. அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர் நடிப்பாக இருக்காது. அப்படியே வாழ்ந்திருப்பார். ஏன் ரஜினி, கமல் போன்றோரை எடுத்துக் கொண்டால் அவர்களை எல்லாம் நான் சொல்லவே மாட்டேன்.
ரஜினி நடித்தால் அதிகமாக நடிப்பார்.கமல் வித்தியாசமாக நடிப்பார். ஆனால் சரத்குமார் தான் அந்த கதாபாத்திரத்திலயே மூழ்கியிருப்பார் என்று கூறினார். மேலும் காஞ்சனா படத்தை பார்த்தால் அந்த அளவிற்கு யாராலும் நடித்திருக்க முடியாது. நாட்டாமை எடுத்து கொண்டால் நாட்டாமையாகவே வாழ்ந்திருப்பார் என மிகவும் பெருமையாக கூறினார்.