---Advertisement---

ரஜினி – கமல் இணையும் படத்தின் புரமோ வீடியோ!.. புது போஸ்டருடன் வெளியான அப்டேட்!..

Published on: February 20, 2026
---Advertisement---

நடிகர் ரஜினியும் கமலும் ஒன்றாக இணைந்து நடித்த 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவில் ரஜினியும், கமலும் சீனியர் நடிகர்களாகவும், முக்கிய நடிகர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். ரஜினியும் கமலும் துவக்கத்தில் ஒன்றாக இணைந்து படங்களை நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் தனித்தனி பாதையில் பயணிக்க துவங்கினார்கள்.

அதேநேரம் சினிமாவில் போட்டி இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாக இப்போது வரை இருக்கிறார்கள். சினிமாவில் ரஜினி, கமல் போல ஒரு நட்பை பார்க்க முடியாது. இதை கமலே ஒரு மேடையில் சொன்னார். இரண்டு பேரும் மீண்டும் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது அது நடந்திருக்கிறது.

ரெட்ஜெயண்ட் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ரஜினியும், கமலும் இணையும் படம் தொடர்பான ஒரு புது போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தின் புரமோ வீடியோ நாளை மதியம் 12. 7 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். அந்த போஸ்டரில் ரஜினி, கமல் இருவரின் கைகளை மட்டும் காட்டியிருக்கிறார்கள். இதையடுத்து, இந்த புரமோ வீடியோவை பார்க்கும் ஆவல் சினிமா ரசிகர்களுக்கு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.