வைரலாகும் ரஜினியின் புதிய புகைப்படம்!..விஜயதசமி வாழ்த்துக்களை வேற மாறி சொன்ன ஐஸ்வர்யா...
தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் ரஜினியின் ஆன்மீகம்,தெய்வீகம் அனைவரையும் ஈர்க்கக்கூடியவனவாக இருக்கும்.
இவரின் பேச்சும் அனைவரையும் உற்சாகப்படுத்துபவையாக அமையும். ஒரு தூண்டுதலை இளைஞர்கள் மத்தியில்
எழ வைக்கும். அப்படி பட்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்தார் ரஜினி.
சினிமாவில் கவனம் செலுத்துவதாக அறிவித்து தற்போது பிஸியாக இருக்கிறார் நம் தலைவர். இந்த நிலையில் அவரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று விஜயதசமி வாழ்த்துக்களை தன் அப்பாவின் புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில் பொய்மை இல்லாத அழகு முகம், தவறான கோணத்தில் என்றுமே இல்லாத முகம் என் தந்தை என கூறி இப்படியே உங்கள் வாழ்விலும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.