50 வருடமாக தமிழ் திரை உலகில் 50 ஆண்டுகளாக ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே இருந்து மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த். இதுவரை எந்த நடிகரும் இந்த வயதில் மிகவும் எனர்ஜியாக ஒரு ஆக்சன் ஹீரோவாக நடித்ததில்லை என்றுதான் சொல்கிறார்கள். ஆனாலும் ரஜினி தன்னுடைய 75 வயதிலும் ஹீரோவாகவே 50 வருடங்களாக தாக்குப்பிடித்து வருகிறார். இவருடைய இந்த வெற்றிக்கும் புகழுக்கும் பக்க பலமாக இருப்பவர் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த்.
இவர்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி லதா ரஜினிகாந்த்தின் தம்பியும் நடிகருமான ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். திருமணமாகும் போது லதா ரஜினிகாந்த் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாராம். அவருடைய சகோதரர் ரவிச்சந்திரன் கோயம்புத்தூரில் ஏதோ ஒரு வேலைக்காக சென்றிருந்தாராம். லதாவின் அம்மா ரவிச்சந்திரனுக்கு போன் செய்து லதாவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து இருக்கிறோம் என கூறி இருக்கிறார். இதைக் கேட்டதும் ரவிச்சந்திரனுக்கு பெரிய ஷாக். உங்களுக்கு என்ன பைத்தியமா என்று கேட்டிருக்கிறார்.
கல்லூரி படிக்கின்ற வயதில் திருமணமா? இப்போ என்ன அவசரம் என கேட்டிருக்கிறார். அது மட்டுமல்ல பையன் யார் என்றும் கேட்டிருக்கிறார். அங்கிருந்து நடிகர் ரஜினிகாந்த் என்று சொன்னதும் இவருக்கு பெரிய அதிர்ச்சி. ஏனெனில் ஒரு பக்கம் ரஜினியை பற்றி அப்போது வந்த வதந்தி. இன்னொரு பக்கம் அவர் அப்பவே சூப்பர் ஸ்டார். அவர் வந்து லதாவை திருமணம் செய்ய ஏன் நினைக்கிறார்? இதெல்லாம் ரவிச்சந்திரனுக்கு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இதற்கு மேல் நீங்கள் எதுவும் பேச வேண்டாம். நான் நேரில் வந்து பேசுகிறேன் என அன்று இரவே சென்னை வந்து விட்டாராம் ரவிச்சந்திரன்.
அவர் வீட்டிற்கு வரும் பொழுது ரஜினி, லதாவின் வீட்டில் உட்காரந்திருந்தாராம். ஏனெனில் ரவிச்சந்திரன் வீட்டார் ரஜினியிடம் ‘ நீங்கள் படத்துல மொரட்டு காளையா இருக்கலாம். இங்க நிஜத்துல ஒரு மொரடன் இருக்கான். அவன கன்வின்ஸ் செய்வது கஷ்டம்’ என சொல்லியிருக்கிறார்கள் போல. ரஜினியும் ரவிச்சந்திரனும் அரை மணி நேரம் மொட்டை மாடியில் தனியாக பேசிக் கொண்டிருந்தார்களாம். அந்த அரை மணி நேரத்தில் ரவிச்சந்திரனை கன்வின்ஸ் செய்து விட்டாராம் ரஜினி. அப்படி என்ன பேசினார் என்பதையும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ரவிச்சந்திரன்.
அவர் பேசும்பொழுது அவர் எப்படிப்பட்ட மனிதர் அவரைப்பற்றி பல விமர்சனங்கள் பல வதந்திகள் வந்தது அதையும் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவர்களுடைய திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது. திருமணத்தில் அவர் மீசை இல்லாமல் இருப்பார். அதற்கு காரணம் அந்த சமயத்தில்தான் தில்லுமுல்லு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அவர்களுடைய திருமணம் திருப்பதியில் நடந்ததாம் .காலை நாலு முப்பது மணிக்கு முகூர்த்தம் .திருமணத்தை முடித்து ஆறு மணிக்கு திருப்பதியிலிருந்து கிளம்பி 9 மணிக்கு சென்னை வந்து விட்டார்களாம். 10 மணிக்கு உடனே ஷூட்டிங் கிளம்பி விட்டாராம் ரஜினிகாந்த் .திருமணம் ஆன முதல் நாளே படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டார். அதுவும் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு என ரவிச்சந்திரன் அந்த பேட்டியில் கூறினார்.