Categories: Cinema History Cinema News latest news

நீங்க இந்த மாதிரி நடிக்கலாமா?!.. அறிவுரை சொன்ன பெண்மணி!.. மன்னிப்பு கேட்ட ரஜினி!…

Actor Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் பின் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் நுழைந்தார்.

ரஜினியின் 100வது திரைப்படம்தான் ஸ்ரீராகவேந்திரா. இப்படத்தில் ரஜினிகாந்த் தன்னை ராகவேந்திரராகவே இயல்பாக காட்டியிருப்பார். இப்படம் அன்றைய காலத்தில் மக்களால் மிகவும் அதிக அளவில் ரசிக்கப்பட்டது. இப்பட வெற்றிக்கு பின் ரஜினி சினிமாவில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தார்.

இதையும் வாசிங்க:நடிகர்களையே பதம் பார்த்த ஒற்றை பாடல்வரி… சிக்கலிலிருந்து தப்பிக்க உதவிய வாலி…

இப்படத்திற்கு பின் பல தொடர்ச்சியான பட வெற்றிக்கு பின் ரஜினி நடித்த திரைப்படம்தான் மாவீரன். இப்படத்தில் ரஜினி பெண்களை இழிவுபடுத்தி பேசியிருந்தார். ஒரு முறை ரஜினி ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு வயதான பெண் ரஜினியிடம் வந்து பேசியுள்ளர். அப்போது ரஜினியிடம் அப்பெண் ‘நாங்கள் உங்களை ராகவேந்திரராக பார்த்துள்ளோம்.. நீங்க போய் பெண்களை பற்றி இவ்வாறெல்லாம் பேசி நடிக்கலாமா?… என கேட்டுள்ளார்.

அந்த பெண் பேசியதை புரிந்து கொண்ட ரஜினி அமைதியாக சிரித்துள்ளார். அப்போது அந்த பெண் இனி வரும் படங்களில் இவ்வாறெல்லாம் பேசாதீங்க தம்பி என கூறிவிட்டு சென்றுவிட்டாராம். ஆனால் ரஜினியோ இதை பற்றி எந்த கவலையும் படவில்லையாம். மிகவும் புத்துணர்ச்சியாக உணர்ந்துள்ளார். பின் விமானத்தை விட்டு இறங்கியதும் ரஜினி அப்பெண்ணிடம் சென்று இனி நான் அவ்வாறு பேசமாட்டேன்..என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.. என கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

ரஜினி அந்த காலத்தில் தனது எந்தவொரு விஷயமானாலும் பாலசந்தரிடம் கூறுவது வழக்கம். அப்போது அவரிடம் நடந்ததை கூறியுள்ளார் ரஜினிகாந்த். அதற்கு பாலசந்தரும் ஆமாம் ரஜினி நானும் அப்படம் பார்த்தேன்… இனி இது போன்ற கதைகளில் நடிக்காதே..நீ இப்போது குழந்தைகள் விரும்பும் நாயகன், அதனால் இந்த மாதிரியான கதைகளில் நடிக்காதே என கூறினாராம். அதிலிருந்து ரஜினி பெண்களை இழிவுபடுத்தி பேசும் கதைகளில் நடிப்பதையே விட்டுவிட்டாராம்.

இதையும் வாசிங்க:20 வயசுல ‘நிஜ’ ரௌடியை பொழந்த ரஜினிகாந்த்… காரணம் கேட்டா அசந்துடுவீங்க… சூப்பர் ஸ்டார்னா அப்டிதான்!

Published by
amutha raja