நான் விரும்பிய இரண்டே நடிகைகள்!.. நடந்ததை எண்ணி மன்னிப்பு கேட்ட ரஜினி!.. இப்படி ஒரு ப்ளாஸ்பேக்கா?..

0
986
rajini
rajini

தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஒரு மாபெரும் ஆளுமையாக சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது ஜெய்லர் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் நடந்த மீனா 40 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து அனைவரையும் சந்தோஷப்படுத்தினார்.

மேடையில் ரஜினி பேசும் போது பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு மீனாவுக்கு பக்க பலமாக இருந்தனர். அப்போது ரஜினி ‘என் வாழ்க்கையில் நான் மிகவும் நேசித்த நடிகைகள் இரண்டே பேர்தான். அவர்கள் பெயர் சொன்னால் கூட இங்க இருக்கும் மற்ற நடிகைகள் கோபப்பட மாட்டார்கள்’ என்று கூறி ஆரம்பித்தார்.

அவர் விரும்பிய நடிகைகள் ஸ்ரீதேவி மற்றும் மீனாவாம். இருவருமே குழந்தை நட்சத்திரமாக அவர்களின் சினிமா பயணத்தை தொடங்கியவர்கள். ரஜினியுடன் ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் மீனா. அப்போது அவருக்கு வயது 7. அதன் பிறகு ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. அந்தப் படத்தில் நடிக்கும் போது அமுல்பேபி மாதிரி, சப்பியாக, பண்ணு மாதிரி இருந்தார் என மேடையில் ரஜினி கூற இருந்த அனைவரும் ரஜினியா இப்படியா பேசுறது என ஆச்சரியப்பட்டனர்.

அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு எஜமான் படத்தில் ஜோடி சேர்ந்தனர். அப்போது ரஜினி ஹீரோயின் யார் என்று கேட்டாராம். மீனா என தெரிஞ்சதும் ஷாக் ஆயிட்டாராம். சின்ன குழந்தையை போய் எனக்கு ஹீரோயினா நடிக்க சொல்றீங்களே என்று ரஜினி கேட்டாராம். அப்போது தெலுங்கில் ஏற்கெனவே மீனா நடித்த இரண்டு படங்களின் பாடல்களை போட்டுக் காண்பித்தனராம்.

அதை பார்த்ததும் ரஜினிக்கு ஒரே ஷாக்காம். அந்த அமுல் பேபியா இது ? என்று கேட்டாராம் ரஜினி. அதன் பிறகு தொடர்ந்து வீரா, முத்து என ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட மீனாவிடம் ரஜினி படையப்பா கதையை சொல்லியிருக்கிறார். அப்போது
கதையை கேட்ட மீனா ‘ நீலாம்பரி கேரக்டரை நான் தான் பண்ணுவேன்’ என்று ரஜினியிடம் சொன்னாராம்.

இதையும் படிங்க : இளையராஜா தேடிச்சென்று வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர்!.. அவர் யார் தெரியுமா?..

அதற்கு ரஜினி ‘அது உனக்கு சரி வராது, வேண்டுமென்றால் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடி’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மீனா அடம்பிடித்தாராம். பின் ரஜினி கே.எஸ். ரவிக்குமாரிடம் சொல்லி மீனாவை சமாதானம் செய்ய வைத்து
ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தாராம். இந்த கதையை சொல்லிவிட்டு ரஜினி ‘இப்போது கூட அந்த படையப்பா பட சம்பவத்தால் மீனாவுக்கு என் மீது கோபத்தில் தான் இருப்பார், எனக்கு தெரியும், அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகவும் நாகரீகமாக பேசினார்.

google news