பெருந்தோல்வியை தழுவிய ரஜினியின் அந்த படம்!..இத செஞ்சிருந்தா படம் வேற லெவல்ல இருந்திருக்கும்!..ஆதங்கத்தை கொட்டிய பிரபலம்!..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
ரஜினி படம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாகவே அமையும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. முன்பெல்லாம் ரஜினியின் படங்கள் பெரும்பாலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க : ரஜினி புகைப்படத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசிய நிறுவனம்… ‘நோ’ சொன்ன சூப்பர் ஸ்டார்… என்ன காரணம் தெரியுமா?
கமெர்ஷியலாக நகைச்சுவையுடன் சேர்ந்து ஹிட் அடித்த படங்களாகவே அமைந்திருக்கும். ஆனால் இப்ப உள்ள படங்களில் அவருக்கு ஒரு மாஸை உருவாக்க நினைத்து சில விஷயங்களில் கோட்டை விடுகின்றனர் சில இயக்குனர்கள். அந்த வகையில் பலராலும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படமாக அமைந்தது கே.எஸ்.ரவிக்குமாரின் லிங்கா திரைப்படம் தான்.
ரவிக்குமார் படம் என்றாலே கமெர்ஷியலுக்கு பெயர் போனவர். ஆனால் இந்த லிங்கா படம் ரஜினியின் கெரியரில் பெருமளவு எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற படமாக விளங்கியது. இதற்கு காரணம் அவரிடம் இருந்த அந்த நகைச்சுவை அந்த படத்தில் சரியாக இல்லாமல் போனது மற்றும் கமெர்சியல் காட்சிகள் மிஸ் ஆனது இது மட்டுமே காரணமாக இருந்தது என்று ரஜினியின் தொடர் படங்களில் நடித்த நடிகருமான இயக்குனருமான அனுமோகன் தெரிவித்தார். இந்த இரண்டு மட்டும் இருந்திருந்தால் லிங்கா படம் இன்றைக்கு பெருமளவு ஹிட் அடித்திருக்கும் என கூறியிருக்கிறார்.