எம்ஜிஆருக்கு வாய்ச்சது ரஜினிக்கு வாய்க்கல!.. நிம்மதி இல்லாம போனதற்கு காரணம் இதுதான்!
கோலிவுட்டில் தலை சிறந்த நடிகராகவும் அரசியலில் ஒரு நல்ல தலைவராகவும் வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவரின் ஆகச்சிறந்த நடிப்பு மற்றும் கொடைத்தன்மை மக்களை மிக எளிதாக இவருடன் நெருங்க வைத்தது. தான் ஒரு நடிகர், தலைவன் என்பதை தன் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக சகஜமாக பழகி வந்தார்.
இவரை பார்க்க எப்போதும் ஒரு கூட்டம் அவர் வீட்டின் முன் கூடியே இருக்கும். அதுவும் குறவர் இன மக்கள் அதிகமாக கூடியிருப்பார்களாம். அவர் காரை எடுத்து புறப்பட்டதும் ஓடி வந்து பார்ப்பார்களாம். எம்ஜிஆரும் காரை விட்டு இறங்கி அவர்களை கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி தன் பையில் இருக்கும் காசுகளை அள்ளி அள்ளி கொடுத்து விட்டு தான் செல்வாராம்.
வாரி வழங்கும் கொடைவள்ளலாகவே வாழ்ந்திருக்கிறார் எம்ஜிஆர். அவர் மாதிரி இன்னொரு தலைவரை நடிகரை இன்னும் சினிமாவில் பார்க்க முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த அளவுக்கு கொடை வள்ளலாக இருப்பதற்கு அவரது மனைவியான ஜானகியும் ஒரு காரணம் என்று பிரபல பேச்சாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது ஆனால் ரஜினியின் விஷயத்தில் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டு படப்பையில் ஏராளமான இடங்களை யாருக்காகவோ கொடையாக கொடுத்தார் ரஜினி. ஆனால் அதை மீண்டும் அவர்களிடமிருந்தே அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார் என்று கூறினார். ரஜினிக்கு கொடை வள்ளல் இருந்தாலும் அதை தடுப்பது அவரது மனைவிதான் என்றும் கூறினார். மேலும் ரஜினிஒரு மேடையில் எல்லா செல்வமும் அதிகமான பணமும் இருந்தும் நிம்மதி இல்லை என்று கூறினார். இதை குறிப்பிட்டு சொன்ன பாண்டியன் அவரது மனைவி இப்படி இருந்தால் எப்படி நிம்மதி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.