Cinema History
ரஜினியை பார்த்துகொள்ள போய் விஜயகாந்துக்கு வந்த சினிமா ஆசை!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..
அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக மாறியவர் ரஜினிகாந்த். பல கருப்பு வெள்ளை படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் கமலுடன் இணைந்து நடித்தார். பின்னர் தனியாக நடிக்க துவங்கி பெரிய ஹீரோவாகவும் மாறினார். ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.
அவரின் படங்கள் நல்ல வசூலை பெற்றதால் அவருக்கு தயாரிப்பாளர்கள் கொடுத்த பட்டம் அது. சிவாஜி எப்படி பலருக்கும் உந்துதலாக இருந்தாரோ அப்படி ரஜினியும் இப்போதுள்ள பல நடிகர்களுக்கும் உந்துதலாக இருந்தவர்தான். ரஜினியை பார்த்து சினிமாவில் நடிக்க வந்தவர்கள் பலர். இப்போது கூட தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் ரஜினியின் ஸ்டைலை அப்படியே செய்வதை படங்களில் பார்க்க முடியும்.
இதையும் படிங்க: பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…
இதே ரஜினிதான் விஜயகாந்த் சினிமாவுக்கு வருவதற்கும் காரணமாக இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ரஜினி சினிமாவில் வளர்ந்துகொண்டிருந்த போது மதுரையில் தனது அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் கிடையாது.
1976ம் வருடம் விஜயகுமார் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ‘ஆசை அறுபது நாள்’. இந்த படம் 100 நாள் ஓடியது. இப்படத்தின் தயாரிப்பாளர் மதுரையை சேர்ந்தவர். அப்படத்திற்கான விழா மதுரையில் நடந்தபோது ரஜினி அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த தயாரிப்பாளர் விஜயகாந்துக்கு நெருக்கமானவர். எனவே, மதுரை வந்த ரஜினியை பார்த்துக்கொள்ளும் வேலையை அவர் விஜயகாந்திடம் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா
ரஜினியை ரிசீவ் செய்து ஹோட்டல் அறையில் தங்கவைத்த விஜயகாந்த் பேச்சு துணைக்காக அவருடன் இருந்தார். அப்போது சிகரெட்டை தூக்கிபோட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலை செய்து காட்டும்படி விஜயகாந்த் கேட்க ரஜினியும் அதை செய்து காட்டியுள்ளார். அப்படியே இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது ‘நீங்களும் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள்.. நடிக்கலாமே’ என ரஜினி சொல்ல அந்த ஆர்வம் விஜயகாந்துக்கு வந்துள்ளது.
இப்படித்தான் நடிக்கும் ஆசை விஜயகாந்துக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகே அவர் சென்னை வந்து வாய்பு தேடி பல அவமானங்களை சந்தித்து பின் நடிகராக மாறி ஒரு கட்டத்தில் ரஜினி படங்களுக்கே டஃப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோபத்தில் விஜயகாந்த் என்னை எட்டி உதைச்சாரு!.. நாங்க போடாத சண்டையா?- கூலா சொன்ன மன்சூர் அலிகான்…