நண்பர்களுக்காகவே உருவாக்கப்பட்ட படம்!..கதாநாயகியை கடன் வாங்கி நடிக்க வைத்த ரஜினி!..கடைசியில் கிடைச்சதோ நாமம் தான்!..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் 70களில் இருந்து அசைக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். ஏகப்பட்ட சினிமாக்களில் நடித்தாலும் முதன் முதலில் தன் நண்பர்களுக்காகவே ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என எண்ணினார்.
அவரின் நெருங்கிய நண்பர்களான விட்டல், வடிவேலு, தும்பு, பிரதீப், சக்தி, அசோக் ஆகியோர் அடங்கிய ஒரு பத்து பேரை தான் எடுக்க போகும் படத்திற்கு பங்குதாரர்களாக ஆக்கினார். 1993 ஆம் ஆண்டு வெளியான ‘வள்ளி’ திரைப்படம் தான் அது. அவரே தயாரித்து கதை வசனம் எழுதி நடித்த படம் தான் வள்ளி. அந்த படத்தை இயக்கும் பொறுப்பையும் தன் நண்பரான கே. நடராஜனிடம் ஒப்படைத்தார் ரஜினி.
இதையும் படிங்க : “உங்க ஆதரவு எனக்கு தேவையில்லை”… எம்.ஜி.ஆரின் முகத்திற்கு நேராகவே கொந்தளித்துப் பேசிய வாலி…
அதில் அமைந்த ‘ நீ விரும்புற பொண்ணை விட உன்ன விரும்புற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்’ மற்றும் ‘அரசாங்கத்திட்ட இலவசமா சேலை வேட்டி கேக்குறத விட வேலை வெட்டி கேளுங்கயா’ என்ற பஞ்ச் வசனத்தை எழுதி ரஜினிக்கு விசில் பறந்தது. மேலும் அந்த படத்தில் நடிகைகளை தேர்வு செய்ய எந்த நடிகையும் சரி வராததால்
அந்த நேரத்தில் பாரதிராஜாவால் அறிமுகமான நடிகை பிரியா ராமன் தான் ரஜினி கண்ணில் பட்டார். உடனே பாரதிராஜாவிடம் உஙகள் கதாநாயகியை என் படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டுமென என ரஜினி கேட்க தயங்காமல் சம்மதம் சொன்னார் பாரதிராஜா. படம் வெளியாகி வெற்றி பெற்றதா? என்றால் இல்லை. ஆனால் 50 % லாபத்தை பெற்றதால் கிடைத்த லாபத்தை தன் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கிறார் ரஜினி. மேலும் வள்ளி படத்தை பொறுத்தவரை ரஜினியின் சொந்த நிறுவனமான ரஜினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டதால் இந்த படத்தின் தோல்விக்கு பிறகு வேறெந்த படமும் அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.