சூப்பர் ஸ்டாருனா என்னவேணும்னாலும் சொல்லுவீங்களா?..ரஜினிக்கு மறுவாழ்வு கொடுத்ததே அந்த வில்லன் தான்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் அசாத்திய வளர்ச்சி இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு உந்துதலாகவே இருந்து வருகிறது. ரஜினியை தன்னுடைய ரோல்மாடலாகவே கருது வருகின்றனர் இளம் தலைமுறை நடிகர்கள்.
அந்த அளவுக்கு இவரின் வளர்ச்சி உச்சத்தை அடைந்து நிற்கிறது. முதலில் ரஜினியை எதேச்சையாக பார்த்த பாலசந்தர் பேரும் தெரியாமல் சும்மா தோற்றத்தை மட்டும் நியாபகம் வைத்துக் கொண்டு அபூர்வ ராகங்கள் படத்திற்காக ரஜினியை தேடி நடிக்க வைத்தார் பாலசந்தர். இப்படி பல படங்கள் தொடர்ச்சியாக தன்னுடைய ஸ்டைலாலும் நடிப்பாலும் மக்கள் அனைவரையும் ரசிக்க வைத்தார் ரஜினி.
ரஜினியின் சினிமா கெரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம் முரட்டுக்காளை திரைப்படம். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு நடிகர் இருக்க முடியுமா என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இதில் வில்லனாக நடித்த ஜெய் ஷங்கரின் கதாபாத்திரம் தான். அந்தக் காலங்களில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்த ஜெய்ஷங்கர் முரட்டுக்காளை படத்தின் மூலம் வில்லனாக புதிய அவதாரம் எடுத்தார்.
இதுவும் முரட்டுக்காளை படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு காரணமாகும். இதை பற்றி ஜெய்ஷங்கரின் நண்பரும் அரசியல் பிரமுகருமான டாக்டர் காந்தராஜிடம் ‘ஜெய்ஷங்கர் பட வாய்ப்பின்றி தவித்த போது ரஜினிதான் முரட்டுக்காளை படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்தாரா’ என்று கேட்ட போது உடனே கோபப்பட்ட காந்தராஜ் ‘சூப்பர் ஸ்டாருனா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? ஜெய்சங்கர் நடித்ததால் தான் படம் மேலும் ஹிட் ஆகி ரஜினிக்கு இந்த படம் மறுவாழ்வு கொடுத்துள்ளது. ஆனால் ஜெய்ஷங்கரை நடிக்க வைத்தது ரஜினி இல்லை, ஏவிஎம் சரவணன் தான்.ஆகவே இனிமேல் ஜெய்சங்கரால் தான் ரஜினிக்கு இப்படி ஒரு படம் அமைந்தது என்று கூறுங்கள்’ என்று கூறினார்.