‘ஹுக்கும்’ பாடலால் தான் யாரென்பதை நிரூபித்த ரஜினி! இது கோபத்தின் வெளிப்பாடுதான்! பத்திரிக்கையாளர் பரபரப்பு பேட்டி
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 70,80களில் இருந்தே தன்னை ஒரு நல்ல நடிகனாக நிலை நிறுத்திக் கொண்டு வருகிறார் ரஜினி. வில்லனாக , துணை நடிகராக, நடிகராக, ஹீரோவாக , ஸ்டாராக என படிப்படியாக முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக தன்னை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இன்று வரை தன்னை சூப்பர் ஸ்டார் என்று ரஜினி கூறியதே இல்லை. காட்டியதும் இல்லை. ஆனால் அந்தப் பட்டத்துக்கு இத்தனை பேர் போட்டி போடுகிறார்கள் என்பதை அறிந்து தான் கொஞ்சம் காண்டில் இருக்கிறார் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
மேலும் நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் பாடல் மூலம் கோடம்பாக்கத்தில் சிலர் அதிர்ப்தியில் இருக்கின்றனர். ஏனெனில் ரஜினி ஒரு அசைக்க முடியாத ஒரு நடிகராகத்தான் இருக்கிறார். இந்தப் பாடல் மூலம் தன்னை யார் என்றும் அவரே சொல்வது மாதிரியான வரிகள் இடம்பெற்றிருப்பது சற்று அதிர்ப்தியாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.
ஆனால் இது விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் இருக்கின்றது என்று செய்யாறு பாலு கூறினார். ஏனெனில் அந்த பாடல் வரியில்,
இதையும் படிங்க :‘காவாலா’ பாடலால் ரஜினியை மறந்த ரசிகர்கள்! ஆனால் அதுக்கு பின்னாடி ஒரு strategyயே இருக்காம்..
பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..
என்று எழுதப்பட்டிருக்கின்றது. இது கண்டிப்பாக கோபத்தின் வெளிப்பாடுதான் என்றும் கூறியிருக்கின்றார். சொல்லப்போனால் இது ரஜினியின் கவனத்தை தாண்டி வந்திருக்காது. கண்டிப்பாக ரஜினியிடம் அனுமதி பெற்ற பிறகே பாடல் வரியில் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் எங்கு போனாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் யார் என மீடியாக்கள் கேட்பதாலேயே ரஜினியே சொல்லி வச்ச பாடல் மாதிரி தான் இந்த பாடல் வரிகள் இருக்கிறது என்று கூறினார். இந்தப் பாடல் மூலம் நான் தான் சூப்பர் ஸ்டார், வேறு யாருமில்லை என்று ரஜினி சொல்வதாக தெரிகிறது என்றும் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.