இயக்குனர் சிவாவிற்கு தங்க செயின் பரிசளித்த சூப்பர் ஸ்டார்.... என்ன காரணம் தெரியுமா?
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் தான் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றிருந்தது.
இதுவரை வயதான தோற்றத்தில் மட்டுமே பார்த்து வந்த ரஜினியை சற்று இளமையான தோற்றத்திலும், அதே பழைய கம்பீரமான ரஜினியையும் திரையில் காட்டி இருந்தார் சிவா. அதனால் ரசிகர்கள் அண்ணாத்த படத்திற்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பை அளித்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சிவாவை நேரடியாக அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அண்ணாத்த படம் குறித்தும் சில தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் சிவாவுடன் ரஜினி பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் இயக்குனர் சிவாவிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றையும் வழங்கியுள்ளாராம். அதன்படி சந்திப்பின் முடிவில் ரஜினிகாந்த் சிவாவுக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத சிவா இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம்.
அண்ணாத்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் உடல்நல பிரச்சனை காரணமாக அடிக்கடி ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சிகிச்சைக்காக சென்று விடுவாராம். ஆனால் அதை பெரிய சிரமமாக கருதாத சிவா ரஜினியை அதிக அக்கறையுடனும், அன்புடனும் பார்த்துக் கொண்டாராம். அதன் காரணமாகவே ரஜினி தங்க செயினை பரிசாக வழங்கி இருப்பார் என கூறப்படுகிறது.