ரஜினியை அடிக்கனும் நீங்க வாங்க.! தெறித்து ஓடிய பிரபல நடிகர்.! சுவாரஸ்ய பின்னணி.!

ஏற்கனவே உச்சதித்தில் இருக்கும் நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி, இனி சினிமாவுக்கு வர இருக்கும் நடிகர்ளுக்கும் சரி பெரும்பாலானவர்களுக்கு தற்போதும் ஓர் முன்னுதாரணமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் அளவுக்கு ரசிகர்களை புரிந்து அவர்களுக்கு ஏற்றபடி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நடிகர் தென்னகத்தில் கிடையாது என்றே கூறவேண்டும். அந்தளவுக்கு தனது நடிப்பால் நம்மை கிற்ங்கடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தற்போது எந்த ஒரு ஸ்டைலான டான் கதாபாத்திரம் எடுத்தாலும் இவரின் தாக்கம் இல்லாமல் எடுக்க முடியாது. அந்தளவுக்கு ட்ரெண்ட் செட்டராக இருந்த திரைப்படம் பாட்ஷா. இந்த படத்தை ரீகிரியேட் செய்ய சொன்னலும் சரி, இரண்டாம் பாகம் எடுக்க சொன்னாலும் சரி ரஜினியே மறுத்துவிடுவார். அந்த மேஜிக்கை திரும்ப நிகழ்த்துவது கடினம். அது ரஜினியால் மட்டுமே அப்போது சாத்தியம்.
அந்த திரைப்படத்தில் ஒரு மாஸ் ஹீரோ கதாபாத்திரம் எப்படி வடிவமைக்க பட வேண்டும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அப்படி வடிவமைத்து இருப்பார். அதில் ஒரு காட்சியில் ரஜினியையே கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும். அதனை வில்லன் செய்ய கூடாது வேறு யாரவது அடிக்க வேண்டும். அதற்காக படக்குழு ஆளை தேடி வந்தது.
உடனே ரஜினி, ஆனந்தராஜிடம் கேளுங்கள் என கூற, அவரிடம் நீங்களே கூறி சம்மதம் பெற்றுவிடுங்கள் என படக்குழு கூறவே, அவரும் அனந்தராஜை கூப்பிட்டு பேசுகிறார். என்னை கட்டி வைத்து அடிக்க வேண்டும் என கூறியவுடன், ஆனந்த்ராஜ், சார் ஆளைவிடுங்க நான் கிளம்புறேன். என ஆனந்த்ராஜ் ஓட பார்த்தாராம்.
இதையும் படியுங்களேன் - அஜித் ரெம்ப பயப்படுவார்.! இவர் பேசுறத கேட்டா ரசிகர்கள் கோச்சிக்க போறாங்க.!
உடனே ரஜினி தடுத்து நிறுத்தி, அந்த படத்தின் கதைக்களத்தை விளக்கி, இதன் காரணமாக தான் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கிறீங்க. நீங்க அடித்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். என சமாதானம் செய்து ஆனந்தராஜை அப்படத்தில் நடிக்க வைத்திருப்பார் ரஜினிகாந்த். படத்திலும் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினி கூறியது போல , ரஜினியை ஆனந்த்ராஜ் அடிக்கும் போது அது ஏற்றுக்கொள்ள கூடியதாகவே இருந்தது.