தமிழ்சினிமாவில் விஜயின் படத்துக்கு தான் டிசைன் டிசைனா பிரச்னை வரும். ஆனால் ரஜினி படத்துக்கே பிரச்னை வந்து அந்த படமே தடை உத்தரவு வரை போய் வெளியாகி சூப்பர் ஹிட் சம்பவம் ஒன்று கோலிவுட்டில் நடந்து இருக்கிறது. அதுகுறித்து சுவாரஸ்ய தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
ரஜினியின் நடிப்பில் 1984ம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் தான் நான் மகான் அல்ல. இப்படத்தில் ரஜினிகாந்த், ராதா, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். விஸ்வநாத் என்ற இந்தி படத்தின் ரீமேக்காக உருவானது. எஸ்.பி.முத்துராமன் இந்த படத்தினை இயக்கி இருந்தார்.
இதையும் வாசிங்க: டைகர் கா ஹுகும்!.. சூப்பர்ஸ்டார் மாதிரியே ட்ரை பண்றாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்!.. தீயாய் பரவும் போட்டோஸ்!..
இப்படம் 14 ஜனவரி 1984, பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வசூலை தட்டி சென்றது. ஆனால் இந்த படம் முதலில் பிரச்னை அதிகமாக சந்தித்தது. முதலில் இந்த படத்துக்கு நான் காந்தி அல்ல என்றே பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த படத்தின் போஸ்டர் செய்தித்தாளில் ரிலீஸாகிறது. கவிதாலயா தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் நான் மகான் அல்ல திரைப்படம் என அறிவிக்கப்பட்டது. இதை பார்த்த சமூக ஆர்வலர் சைதாப்பேட்டை கோபாலன் இப்படி எப்படி பெயர் வைக்கலாம்.
இது காந்தியின் பெயருக்கே பெரிய அவமரியாதை என கேஸை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று செல்கிறார். கேஸ் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் எதிர்ப்பு ஒரு பக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இதையும் வாசிங்க: தலைவர் 170-ல் களமிறங்கும் மாஸ் வில்லன்!.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே!..
சென்சாருக்கு படம் செல்கிறது. பாதி படம் முடிந்த நிலையில் வக்கீலான ரஜினிகாந்த் குற்றவாளியை குத்துகிறார். ரத்தம் காந்தி மீது தெறிக்கிறது. இது சென்சார் அதிகாரிகளுக்கு இந்த காட்சி வருத்தத்தினை தருகிறது. இது பெரிய அவமரியாதை.
உடனே காட்சியை நீக்குங்கள். படத்தின் பெயரும் மாற்றப்படாமல் படத்தினை ரிலீஸ் செய்யவே முடியாது என தடை உத்தரவு தருகிறார்கள். அதே நேரத்தில் கோர்ட்டிலும் படத்தின் பெயரை மாற்ற உத்தரவு வருகிறது. இதையடுத்தே படத்திற்கு நான் மகான் அல்ல என்ற பெயர் மாற்றப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…