தமிழக தொழிலாளர்களை புலம்ப வைத்த ரஜினி.! விரைவில் ஒரு பஞ்சாயத்து கன்ஃபார்ம்.!
தமிழ் சினிமாவில், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம் என பல்வேறு சங்கங்கள் இருப்பதுபோல தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் எனப்படும் ஃபெப்சி தொழிலாளர் அமைப்பும் இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சினிமாவை மட்டுமே தொழிலாக நம்பி வேலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிற்குள் எங்கு ஷூட்டிங் இருந்தாலும் இவர்களை தான் முக்கியமாக பயன்படுத்த வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் கட்டுப்பாடு. ஆனால் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களின் ஷூட்டிங் சமீபகாலமாக வேறு மாநிலத்தில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அஜித்தின் திரைப்படங்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தான் நடைபெற்று வந்தது. தற்போதும் கூட அவரது திரைப்படம் ஹைதிராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது.
விஜய் தற்போது நடித்து வரும் தெலுங்கு இயக்குனர் திரைப்பட சூட்டிங் முதலில் ஹைதராபாத்தில் தான் முழுக்க முழுக்க பிளான் செய்யப்பட்டது. பின்னர் இங்குள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று விஜய் கூறியதன் பேரில் சென்னைக்கு முக்கால்வாசி ஷூட்டிங் மாற்றப்பட்டது. இதன் மூலம் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் நலம் பெற்றனர்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் நெல்சன் இணையும் புதிய படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அப்படியானால் அங்குள்ள தொழிலாளர்கள் தான் பயன் படுத்தபடுவார்கள் என்றும், தமிழ் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் - ஹாலிவுட் பிரமாண்டங்களில் கலக்கும் மலையாள பைங்கிளி.! ஜூராசிக் வேர்ல்ட்.. ஸ்டார் வார்ஸ்...
இதனைப் பார்த்த சினிமா வட்டாரங்கள், ஏற்கனவே விஜய் படத்திற்கு முழுக்க முழுக்க ஹைதராபாத்தில் சூட்டிங் என்றதும், தொழிலாளர் சங்கம் கண்டனங்களை தெரிவித்தனர். அதன்பிறகு சூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டது. தற்போது ரஜினியும் அதேபோல ஐதராபாத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளார்.
அப்படி ஆரம்பித்தால், இங்கு பஞ்சாயத்து எழும் என்று தற்போதைய கூறி வருகின்றனர். தமிழ் தொழிலாளர்களை மனதில் வைத்து, சூட்டிங்கை தமிழகத்தில் நடத்த சொல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுவார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.