சென்சார் பிரச்சனையால் தலைப்பு மாற்றப்பட்ட ரஜினி படம்!. அட இது தெரியாம போச்சே!..

rajini
Actor Rajini: சினிமாவை பொறுத்தவரை தணிக்கை துறை பல கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறது. ஒரு திரைப்படம் உருவானதும் தணிக்கை குழுவுக்கு அனுப்புவார்கள். சில காட்சிகளோ, வசனங்களோ தவறாக இருந்தால் இயக்குனரிடம் அதுபற்றி விளக்கம் கேட்பார்கள். விளக்கம் திருபதி அளித்தால் விட்டுவிடுவார்கள்.
திருப்தியாக இல்லையெனில் சமந்தப்பட்ட காட்சிகளையோ, வசனங்களையோ மாற்ற சொல்வார்கள். பெரும்பாலும், அந்த வசனங்களை மியூட் செய்து விடுவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது இருக்கிறது. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படங்களுக்கு யூ சான்றிதழும், குடும்பத்தோடு பார்க்கலாம் அதேநேரம் கொஞ்சம் ஆபாசமும் இருந்தால் யு/ஏ கொடுத்துவிடுவார்கள். அதிக வன்முறை இருந்தாலும் யு/ஏ கொடுப்பார்கள். வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கலாம் என்றால் ஏ சான்றிதழ் மட்டுமே கிடைக்கும்.
இதையும் படிங்க: நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்கு கெட்டவன் – ரஜினி வில்லனாக கலக்கிய திரைப்படங்கள்..
அதேபோல், பெரிய தலைவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்கும்போது பல எதிர்ப்புகளும் வரும். மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையை குற்றப்பத்திரிக்கை என்கிற பெயரில் இயக்குனர் ஆ.கே.செல்வமணி திரைப்படமாக எடுத்தார். ஆனால், தணிக்கை அதிகாரிகள் அப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெட்டிவிட்டார்கள். எனவே, அந்த படமே வெளியாகவில்லை.
.
சில படங்களில் சில காட்சிகளை மட்டும் கொஞ்சம் மாற்ற சொல்வார்கள். அப்படி செய்துவிட்டால் சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். ஆனால், ரஜினி நடித்த ஒரு திரைப்படத்தின் தலைப்புக்கே தணிக்கை அதிகாரிகள் எதிர்ப்பு செய்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, நம்பி்யார், சோ, ராதா, வி.கே.ராமசாமி, செந்தாமரை உள்ளிட்ட பலரும் நடித்து 1984ம் வருடம் வெளியான நான் மகான் அல்ல. இந்த படத்திற்கு படக்குழு வைத்த பெயர் நான் காந்தி அல்ல என்பதுதான். ஆனால், தணிக்கைத்துறை அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே, நான் மகான் அல்ல என மாற்றிவிட்டனர். ஒரு தலைப்பில் ஒரு படம் உருவாகி தலைப்பு மாற்றப்பட்ட ஒரே ஒரு ரஜினி படம் நான் மகான் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..